ADDED : செப் 27, 2025 04:50 AM

லட்டு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. லட்டுகளில் பல வகைகள் உள்ளன. ரவை லட்டு, கடலை மாவு லட்டுகளை சுவைத்திருப்பீர்கள். பாசிப்பருப்பு லட்டுவை சுவைத்துள்ளீர்களா? மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.
செய்முறை முதலில் பாசிப்பருப்பை கழுவி, சுத்தம் செய்யவும்.அடுப்பில் வாணலி வைத்து, பாசிப்பருப்பை போட்டு நன்றாக வறுக்கவும். அதன் நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். அதை தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆறியதும் மிக்சியில் போட்டு பொடியாக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, சிறிது நீர் ஊற்றி வெல்லத்தை போடவும். இனிப்புஅதிகம் தேவை என்றால், கூடுதலாக வெல்லம் சேர்க்கலாம். வெல்லம் நீருடன் சேர்ந்து பாகு ஆகும் வரை கொதிக்க விடவும். அதை அடுப்பில் இருந்து, இறக்கி விடவும்.
அதன்பின் அடுப்பில் வாணலியை வைத்து, ஐந்து ஸ்பூன் நெய் ஊற்றவும். காய்ந்ததும் பொடித்த பாதாம், முந்திரிப்பருப்பு, கொப்பரை துருவல், உலர்ந்த திராட்சையை போட்டு, பொன்னிறமாக வறுக்கவும். தீய்ந்துவிடக்கூடாது. ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள வெல்லப்பாகை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பு மாவை போடவும். ஏலக்காய் துாள், சிறிதளவு நெய் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும்.
ஆறி கெட்டியானதும், லட்டு பிடிக்க வேண்டும். இதில் ஏராளமான புரோட்டீன் உள்ளது. பாசிப்பருப்பு லட்டுவை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். வெல்லத்துக்கு பதிலாக சர்க்கரை சேர்த்தும் இதை செய்யலாம். ஆனால் சர்க்கரையை விட, வெல்லம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது
- நமது நிருபர் - .