சிவகுமார் பூஜை செய்வதில் மன்னன் அமைச்சர் நாகேந்திரா கண்டுபிடிப்பு
சிவகுமார் பூஜை செய்வதில் மன்னன் அமைச்சர் நாகேந்திரா கண்டுபிடிப்பு
ADDED : ஆக 06, 2026 09:33 PM

பெங்களூரு: ''முதல்வர் சிவகுமாரை போல பூஜைகள், ஹோமங்களை யாரும் செய்வது இல்லை,'' என அமைச்சர் நாகேந்திரா கூறியுள்ளார்.
பல்லாரியில் அவர் அளித்த பேட்டி:
பல்லாரி மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்குமா, கிடைக்காதா என்ற கேள்வி இருந்தது.
ஒரு வழியாக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மாவட்ட வளர்ச்சி தான் எனக்கு முக்கியம். என் முன் பல சவால்கள் உள்ளன.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழலில் எனக்கு தொடர்பு இல்லை என்று, சிறப்பு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்தது.
அமலாக்கத்துறையை பயன்படுத்தி, என்னை ஊழல்வாதியாக சித்திகரிக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது.
பா.ஜ.,வில் ஊழல்வாதிகளே இல்லையா? எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர் அரசியல்ரீதியாக வளர்ச்சி பெறுவதை, பா.ஜ., தலைவர்களால் பொறுத்து கொள்ள முடியாது.
பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி கவனமாக பேச வேண்டும். அவரை போல என்னாலும் தரம் தாழ்ந்து பேச முடியும்.
என்னை பற்றி பேசும் பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை பற்றி பேச, நிறைய உள்ளது. நேரம் வரும் போது பேசலாம்.
பா.ஜ., மக்களை தவறாக வழிநடத்துகிறது. முதல்வர் சிவகுமாரை போல பூஜைகள், ஹோமங்களை யாரும் செய்வது இல்லை. ஹிந்து மதம் யாருடைய சொத்தும் இல்லை. நாட்டில் ஜாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
