தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கூட்லு தீர்த்தா அருவி!

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கூட்லு தீர்த்தா அருவி!

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கூட்லு தீர்த்தா அருவி!


UPDATED : அக் 08, 2026 12:16 AM

ADDED : அக் 07, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 12:16 AM ADDED : அக் 07, 2026 08:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

உடுப்பி நகரில் இருந்து, 54 கி.மீ., ஹெப்ரியில் இருந்து 20 கி.மீ.,யில் கூட்லு தீர்த்தா அருவி அமைந்துள்ளது. இதை, மேற்கு தொடர்ச்சி மலையின் துாய்மையான அருவி என்றும் அழைக்கின்றனர். 150 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியை காண, சுற்றுலா பயணியர் பல பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். அத்துடன், மலையேற்றத்துடன் காணப்படுவதால், சாகச பிரியர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் விருப்பமான இடமாக அமைந்துள்ளது.

அடர்ந்த காடுகள் வழியாக, 4 கி.மீ., சென்றால், இந்த அருவியை காணலாம். இதை காண மூங்கில் தோப்புகள், சலசலக்கும் ஓடைகளை கடந்து பயணிக்க வேண்டும். இந்த காடு தாவரங்கள், விலங்குகளின் புகலிடமாக திகழ்கிறது. இங்கு அரிய வகை பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், பிற வனவிலங்குகளை காணும் வாய்ப்புகள் உள்ளன.

அருவியின் அடிவாரத்தில் உள்ள குளிர்ந்த குளத்தில் புத்துணர்ச்சியூட்டும் வகையில் நீராடி மகிழலாம். இந்த அருவியை சுற்றிலும் செழிப்பான சூழல் மண்டலத்தை ஆராய்ந்து, வானுயர்ந்த மரங்களையும், வண்ணமயமான வன விலங்குகளையும் கண்டு வியப்பீர்கள்.

ஜூன் முதல், நவம்பர் வரை இந்த அருவியை காண செல்வது நல்லது. காலை 9:00 முதல், மாலை 5:00 மணிக்குள் சென்று வரலாம். நுழைவு கட்டணம் எதுவும் இல்லை.

எப்படி செல்வது?



ரயிலில் செல்வோர், உடுப்பி ரயில் நிலையத்தில் இறங்கி, 50 கி.மீ., தொலைவில் உள்ள இந்த அருவிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.

பஸ்சில் செல்வோர், ஹெப்ரி பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 17 கி.மீ.,யில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு பஸ், டாக்சி, ஜீப்பில் செல்லலாம்.

அருகில் உள்ள மற்ற இடங்கள்: 40 கி.மீ., தொலைவில் ஆகும்பே, ஹெப்ரி அருகில் சீதா அருவி; சோமேஸ்வரா வன விலங்குகள் சரணாலயம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us