/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மணிப்பூர் அமைதி பேச்சுக்கு முன் கூகி குழுவினர் மூன்று நிபந்தனைகள்
/
மணிப்பூர் அமைதி பேச்சுக்கு முன் கூகி குழுவினர் மூன்று நிபந்தனைகள்
மணிப்பூர் அமைதி பேச்சுக்கு முன் கூகி குழுவினர் மூன்று நிபந்தனைகள்
மணிப்பூர் அமைதி பேச்சுக்கு முன் கூகி குழுவினர் மூன்று நிபந்தனைகள்
ADDED : ஏப் 03, 2025 07:18 AM
இம்பால் : மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூரின் கூகி மற்றும் மெய்டி குழுக்களுக்கு இடையே நாளை மறுதினம் பேச்சுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், கூகி குழுவினர் மூன்று முன் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இங்கு சமவெளி பகுதிகளில் வசிக்கும் மெய்டி சமூகத்தினர் 2023ல் தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து கோரினர்.
அதற்கு, மலைப்பகுதிகளில் வசிக்கும் கூகி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் இரு இனக்குழுவினருக்கு இடையே மோதலாக மாறியது. தொடர் வன்முறை சம்பவங்களில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் கடந்த பிப்ரவரியில் மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங், நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார்.
தற்போது மத்திய அரசு இரு குழுவினருக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் டில்லியில் நாளை மறுதினம் இரு குழுவினரின் சந்திப்பு மற்றும் பேச்சுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் கூகி குழுவினர் அரசிடம் மூன்று முன் நிபந்தனைகள் வைத்துள்ளனர்.
இது பற்றி கூகி ஜோ கவுன்சில் தலைவர் ஹென்லியந்தாங் தங்லெட் கூறியதாவது:
கூகி - -ஜோ மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மெய்டி நபர்களின் நடமாட்டமும், மெய்டி மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கூகி நபர்களின் நடமாட்டமும் கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.
பேச்சு எளிதாக அமைய குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு விரோத போக்கு நிறுத்தப்பட வேண்டும்; சண்டை நிறுத்த காலத்தில் ஒரு முறையான, அர்த்தமுள்ள பேச்சு நடப்பதற்கான செயல்முறை துவங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

