தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கோரமங்களா அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்

கோரமங்களா அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்

கோரமங்களா அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்


UPDATED : நவ 01, 2026 12:00 AM

ADDED : அக் 31, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 12:00 AM ADDED : அக் 31, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோரமங்களா: பெங்களூரு ஹூடியில் இருந்து கே.ஆர்., மார்க்கெட் செல்லும் பி.எம்.டி.சி., அரசு பஸ் பயணியருடன் நேற்று காலை புறப்பட்டது.

பஸ், கோரமங்களா அருகே தாவரகெரே சதுக்கம் அருகே அந்த பஸ் சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் முன்பகுதியிலிருந்து திடீரென கரும் புகை கிளம்பியது.

இதை பார்த்த பஸ் ஓட்டுநர் முன்னெச்சரிக்கையாக பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பயணியர் அனைவரையும் உடனடியாக பஸ்சில் இருந்து கீழே இறங்கும்படி அறிவுறுத்தினார்.

இதையடுத்து, டிரைவர் உட்பட பஸ்சில் இருந்து பயணியர் அனைவரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில், பஸ்சின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ்சில் திடீரென ஏற்பட்ட தீ குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us