தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விவசாயிகளுக்கு முதல்வர் அவமதிப்பு: அமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு

 விவசாயிகளுக்கு முதல்வர் அவமதிப்பு: அமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு

 விவசாயிகளுக்கு முதல்வர் அவமதிப்பு: அமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு


ADDED : செப் 26, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''வறட்சி நிவாரணமாக மிகவும் குறைந்த தொகையை அறிவித்து, விவசாயிகளை முதல்வர் சிவகுமார் அவமானப்படுத்துகிறார்,'' என, மத்திய அமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டினார்.

கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு, அக்டோபர் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலை பா.ஜ., மற்றும் ம.ஜ.த., இணைந்தே சந்திக்கிறது.

தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்கு, இரு கட்சித்தலைவர்களின் கூட்டம் பெங்களூரிலுள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மத்திய அமைச்சரும், மாநில ம.ஜ.த., தலைவருமான குமாரசாமி, எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் விஜயேந்திரா அளித்த பேட்டி:

மேல்சபை தேர்தலில் நான்கு இடங்களிலும் என்.டி.ஏ., கூட்டணி கட்டாயம் வெற்றி பெறும். முதல்வர் சிவகுமார் மீது ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கே நம்பிக்கை போய்விட்டது. மாநில அரசின் கஜானா காலியாகிவிட்டது. திட்டங்களை செயல்படுத்த நிதியில்லை. அடுத்த சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் என்.டி.ஏ., தலைமையிலான ஆட்சி அமைவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அமைச்சர் குமாரசாமி பேசியதாவது:

கே.பி.எஸ்.சி.,யில் நடக்கும் முறைகேடுகள் குறித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேசாமல் இருக்கிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெறும் 2,500 ரூபாய் நிவாரணம் வழங்குவது நியாயமற்றது. இந்த சிறிய தொகை எந்த வகையிலும் விவசாயிகளுக்கு உதவாது.

தன்னை விவசாயி மகன் என கூறிக்கொள்ளும் முதல்வர் சிவகுமார், குறைந்த தொகையை நிவாரணமாக அறிவித்து விவசாயிகளை அவமானப்படுத்துகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us