வந்தே மாதரம் அவமதிப்பு விவகாரம் சோனியா குறித்து குமாரசாமி சர்ச்சை
வந்தே மாதரம் அவமதிப்பு விவகாரம் சோனியா குறித்து குமாரசாமி சர்ச்சை
ADDED : ஆக 18, 2026 07:47 PM

- நமது நிருபர் -:
''சோனியாவின் உடலில் ஓடுவது இத்தாலி நாட்டின் ரத்தம்,'' என, மத்திய அமைச்சர் குமாரசாமி, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, வந்தே மாதரம் பாடலை நிறுத்துமாறு சைகை காண்பித்தார்.
இது, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சோனியா மீது, மங்களூரில் உள்ள உர்வா போலீஸ் ஸ்டேஷனில், பா.ஜ.,வினர் புகார் அளித்தனர்.
இவ்விவகராம் குறித்து, மத்திய அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டி:
சோனியா நம் நாட்டை சேர்ந்தவர் இல்லை; அவர் திருமணம் முடிந்த பிறகே இந்தியாவுக்கு வந்தார். அவரது உடலில் ஓடுவது இத்தாலி நாட்டின் ரத்தமே.
காந்தி பங்கேற்ற நிகழ்விலே முதன் முறையாக வந்தே மாதரம் பாடப்பட்டது.
இதையெல்லாம், அவர்கள் மறந்து விட்டார்கள். காங்கிரஸ் தலைவர்கள் மீதான மக்களின் பார்வை ஏற்கனவே மோசமாக உள்ளது. இதை மேலும் பெரிதாக்கும் வகையில், சோனியாவின் செயல்பாடுகள் உள்ளன.
தங்களது அரசியல் எதிர்காலத்தை அவர்களே பாழாக்கி கொள்கின்றனர்.
சோனியா நாற்காலி கேட்டு சைகை காண்பித்தார் என்பது முற்றிலும் பொய். இந்த விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள். அவரது செயல்பாட்டை மக்கள் அனைவரும் பார்த்து விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
