/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காட்டு யானை தாக்கி கூலி தொழிலாளி பலி
/
காட்டு யானை தாக்கி கூலி தொழிலாளி பலி
ADDED : டிச 19, 2025 05:01 AM
சாம்ராஜ்நகர்: அ றுவடை செய்து கொண்டிருந்த போது, காட்டு யானை தாக்கி யதில் தொ ழிலாளி உயிரிழந்தார்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின் ஜல்லிபாளையா கிராமத்தில், வாழைத்தோட்டங்களில் வாழைக்குலைகள் அறுவடை நடந்து வருகிறது. இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டியுள்ளதால், காட்டு யானைகளின் தொல்லை அதிகம். கூலி தொழிலாளிகள் பயத்துடன் வாழைக்குலைகள் அறுவடையில் ஈடுபடுகின்றனர்.
தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு, வாழைக்குலைகளை அறுவடை செய்தனர். தமிழகத்தின் மாகனபாளையா கிராமத்தை சேர்ந்த சிவமூர்த்தி, 50, விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரும் வாழைக்குலை அறுவடைக்காக ஜல்லிபாளையா கிராமத்துக்கு பைக்கில் வந்திருந்தார். பணியை முடித்து கொண்டு மற்ற தொழிலாளர்களுடன் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
வனப்பகுதி வழியாக செல்லும் போது, எதிரே வந்த காட்டு யானை அவரை தாக்கி மிதித்து கொன்றது. திடீரென யானை வந்ததால், அவரால் தப்பியோட முடியவில்லை. மற்ற தொழிலாளர்கள் தப்பியோடி உயிர் பிழைத்தனர். அவரை மிதித்து கொன்ற பின்னரும், யானை அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது. தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், யானையை விரட்டி, சிவமூர்த்தியின் உடலை மீட்டனர்.

