அமைச்சர் பதவி கிடைக்கும் லட்சுமி ஹெப்பால்கர் நம்பிக்கை
அமைச்சர் பதவி கிடைக்கும் லட்சுமி ஹெப்பால்கர் நம்பிக்கை
ADDED : ஆக 28, 2026 11:20 PM

பெலகாவி: ''கர்நாடக அமைச்சரவையில், பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது குறித்து, முதல்வர் சிவகுமார் உறுதி அளித்துள்ளார்,'' என, முன்னாள் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.
இது குறித்து, பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இதற்கு முன் மூன்று ஆண்டுகள், அமைச்சராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. வரும் நாட்களில் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தால், சிறப்பாக பணியாற்றுவேன். ஒருவேளை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் வருந்தமாட்டேன். கட்சியை பலப்படுத்துவதில், ஆர்வம் காட்டுவேன்.
எனக்கு அமைச்சர் பதவி கை நழுவ, யாருடைய சதியும் காரணம் இல்ல. சில கட்டாய சூழ்நிலைகளால், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மாநில அமைச்சரவையில், பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது குறித்து, முதல்வர் சிவகுமார் உறுதி அளித்துள்ளார். பொறுத்திருந்து பார்க்கலாம்.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட், ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா உட்பட மற்ற மாநிலங்களில், பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் விரைவில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
தற்போதைய அமைச்சரவையில், பெண்கள் இல்லாதது, அமைச்சரவை முழுமை அடையாதது போல தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
