தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சர்ச் கொடியேற்றம் நடப்பதால் வாகன போக்குவரத்து மாற்றம்

 சர்ச் கொடியேற்றம் நடப்பதால் வாகன போக்குவரத்து மாற்றம்

 சர்ச் கொடியேற்றம் நடப்பதால் வாகன போக்குவரத்து மாற்றம்


ADDED : ஆக 28, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சிவாஜி நகரின் செயின்ட் மேரிஸ் பஸ்லிகா ஆரோக்கிய மாதா சர்ச்சில், இன்று கொடியேற்றம் நடப்பதால், சுற்றுப்புறங்களில் வாகன போக்குவரத்துக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரின், சிவாஜிநகரில் உள்ள செயின்ட் மேரிஸ் பஸ்லிகா ஆரோக்கிய மாதா சர்ச்சில் நாளை கொடியேற்றம் நடக்கவுள்ளது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். வாகன போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, நாளை மதியம் 1:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை, வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாளேகுந்த்ரி சதுக்கத்தில் இருந்து, ஜோதி கபே ஜங்ஷன் வரை, பி.எம்.டி.சி., பஸ்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவாஜி சதுக்கத்தில் இருந்து, ஜோதி கபே வரை, பி.ஆர்.வி., ஜங்ஷனில் இருந்து, செலக்ட் ஜங்ஷன் வரை, பவுரிங் மருத்துவமனை ஜங்ஷனில் இருந்து, செலக்ட் ஜங்ஷன் வரை.

மேலும், குவாட்ரென்ட் சதுக்கத்தில் இருந்து, ஆர்.எம்.எஸ்., ஜங்ஷன் வரை, பம்பூ பஜாரில் இருந்து, சன்னி சதுக்கம் வரை, சன்னி சதுக்கத்தில் இருந்து, ஆர்.எம்.எஸ்., ஜங்ஷன் வரை, பி.எம்.டி.சி., பஸ்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாற்று சாலைகள் குயின்ஸ் சாலையில் இருந்து, சிவாஜி நகர் பஸ் நிலையத்துக்கு செல்லும் பி.எம்.டி.சி., பஸ்கள், பாளேகுந்த்ரி சதுக்கம் அல்லது குயின்ஸ் சாலையில் சென்று, டிராபிக் ஹெட் குவார்டர்ஸ் ஜங்ஷனில், இடது புறம் திரும்பி, இன்பென்ட்ரி சாலையில் சென்று, சென்ட்ரல் ஸ்ட்ரீட் ஜங்ஷனில் இடது புறம் திரும்பி, முன்னோக்கி செல்லலாம்.

பாளேகுந்த்ரி சதுக்கத்தில் இருந்து, ஜோதி கபே ஜங்ஷனை நோக்கி செல்லும், மற்ற வாகனங்கள், சிவாஜி சதுக்கத்தில் இடது அல்லது வலது புறம் திரும்பி, முன்னோக்கி செல்லலாம்.

அனில் கும்ப்ளே ஜங்ஷனில் இருந்து, சிவாஜிநகர் பஸ் நிலையத்துக்கு செல்லும் பி.எம்.டி.சி., பஸ்கள், பி.ஆர்.வி., ஜங்ஷனில் இடது அல்லது வலது புறம் திரும்பி, முன்னோக்கி செல்ல வேண்டும்.

மனிப்பால் ஜங்ஷனில் இருந்து, சிவாஜி நகர் பஸ் நிலையத்துக்கு செல்லும் பி.எம்.டி.சி., பஸ்கள், பி.ஆர்.வி., ஜங்ஷன் அருகில், பயணியரை இறக்கி விட்டு, நேராக சென்று சி.டி.ஓ., ஜங்ஷன் அருகில் இடது புறம் திரும்பி, எம்.ஜி.சாலை வழியாக திரும்பி செல்லலாம்.

பி.எம்.டி.சி., பஸ்களை தவிர, பி.ஆர்.வி., ஜங்ஷனில் இருந்து, சிவாஜி நகருக்கு செல்லும் மற்ற வாகனங்கள், செலக்ட் ஜங்ஷனில் இடது அல்லது வலது புறம் திரும்பி முன்னோக்கி செல்லலாம்.

கமர்ஷியல் தெரு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், பவுரிங் மருத்துவமனை ஜங்ஷனில் இடது புறம் திரும்பி, கப்பன் சாலை வழியாக செல்ல வேண்டும்.

புலிகேசி நகரில் இருந்து, சிவாஜி நகருக்கு வரும் வாகனங்கள குவாட்ரென்ட் சதுக்கத்தில், இடது புறம் திரும்பி, டி.கே.ஸ்ட்ரீட் வழியாக செல்ல வேண்டும்.

கமர்ஷியல் தெருவில் இருந்து, சிவாஜி நகருக்கு வரும் வாகனங்கள், மருத்துவமனை சாலை வழியாக செல்ல வேண்டும்.

பம்பூ பஜாரில் இருந்து, சிவாஜி நகருக்கு வரும் வாகனங்கள், சலீம் கேரேஜ் அருகில், வலது புறம் திரும்பி திம்மைய்யா சாலை வழியாக செல்லலாம்.

ஹெச்.கே.பி., தர்கா பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், சுன்னி சதுக்கத்தில், இடது புறம் திரும்பி காக்பர்ன் சாலை மற்றும் மிர் உபேதுல்லா சாலையில் செல்ல வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us