ADDED : ஆக 18, 2026 08:16 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: லால்பாக் மலர் கண்காட்சியில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதன் மூலம், 3.85 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நம் நாட்டின், 80வது சுதந்திர தினத்தையொட்டி, பெங்களூரு லால்பாக் பூங்காவில், 6ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை மலர், பழக் கண்காட்சி நடந்தது.
இதில், வெளிமாநிலத்தவர் உட்பட ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். 12 நாட்கள் நடந்த கண்காட்சியை 10.12 லட்சம் பேர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சுதந்திர தினத் தன்று, 2.01 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.
இதில், பங்கேற்க பெரியவர்களுக்கு, 80 ரூபாய்; குழந்தைகளுக்கு, 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதன் மூலம், மொத்தமாக 3.85 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளதாக, லால்பாக் பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
