என் மீது என்ன கோபம்; ஏன் இப்படி பார்க்கிறீர்கள்? முதல்வரால் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு தர்மசங்கடம் சட்டசபையில் நேற்று சுவாரஸ்யம்
என் மீது என்ன கோபம்; ஏன் இப்படி பார்க்கிறீர்கள்? முதல்வரால் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு தர்மசங்கடம் சட்டசபையில் நேற்று சுவாரஸ்யம்
ADDED : ஆக 18, 2026 08:18 PM
பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட யஷ்வந்த்பூர் எம்.எல்.ஏ., சோமசேகருடன், மல்லேஸ்வரம் பா.ஜ., உறுப்பினர் அஸ்வத் நாராயண் கைகுலுக்கி சிரித்து பேசினார்
பதவியை ராஜினாமா செய்ய கூறி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் நிலையில், விதான் சவுதாவுக்கு நேற்று காலை அமைச்சர் நாகேந்திரா வந்தார். காரில் இருந்து இறங்கிய போதே பரபரப்புடன் காணப்பட்ட அவர், லிப்டில் ஏறி சென்றார்.
இரண்டாவது மாடிக்கு செல்ல பட்டனை அழுத்துவதற்கு பதில், முதல் மாடிக்கு செல்லும் பட்டனை அழுத்தினார். முதல் மாடியில் லிப்ட் நின்றதும், படிக்கட்டு வழியாக இரண்டாவது மாடிக்கு சென்றார்
சட்டசபைக்குள் வந்த அமைச்சர் நாகேந்திரா, தனது இடத்தில் அமராமல், காங்கிரஸ் உறுப்பினர்கள் வரிசைக்கு சென்று ஒவ்வொருவரிடம் கை குலுக்கி பேசினார். ராகவேந்திரா ஹிட்னால் தோளில் கை போட்டு பேசினார். தான் இயல்பாகவே இருப்பது போல காட்டி கொள்ள முயன்றார்
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடைசி இருக்கையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் தேஷ்பாண்டே, மஹாதேவப்பா ஆகியோரும் அமர்ந்திருந்தனர். யாரிடமும் அதிகம் பேசாமல், அவை நடவடிக்கையை, சித்தராமையா கவனித்து கொண்டு இருந்தார்
'முதல்வர் சிவகுமார் பேசும் போது அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துகிறார்; கன்னடத்தில் பேசினால் நன்றாக இருக்கும்' என்று, உத்தர கன்னடாவின் குமட்டா பா.ஜ., உறுப்பினர் தினகர் கேசவ் ஷெட்டி கூறினார்.
இதற்கு சிவகுமார் பதில் அளிக்கையில், 'நான் முதல்வராக பதவியேற்றதை நீங்கள் பார்க்கவில்லையா... கன்னடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தேனே' என்றார். 'சார், நான் பா.ஜ., எம்.எல்.ஏ.,' என்று தினகர் ஷெட்டி கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது
'என் மீது உங்களுக்கு என்ன கோபம்; என்னை ஏன் முறைப்பது போன்று பார்க்கிறீர்கள்' என, உடுப்பியின் கார்கலா பா.ஜ., உறுப்பினர் சுனில்குமாரை பார்த்து, முதல்வர் சிவகுமார் கேட்டார்
'ஐயோ சார், உங்கள் மீது எனக்கு என்ன கோபம்... நீங்கள் இங்கு நிறைய திட்டங்களை செயல்படுத்துவது பற்றி பேசுகிறீர்கள். அதை எல்லாம் நிறைவேற்ற முடியுமா என்று உங்களை பார்க்கிறேன் அவ்வளவு தான்' என்றார்
'துணை சபாநாயகர் மங்கள் வைத்யாவும், நானும் ஒரே மடத்தின் பக்தர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் அவரை சந்திக்கும் போது எல்லாம், எனது நண்பர் சிவகுமார் அமைச்சரவையில் நான் அமைச்சர் ஆவேன்' என்று, மங்கள் வைத்யா கூறினார். 'ஆனால் அவரை ஏமாற்றி விட்டீர்களே' என்று, பெல்தங்கடி பா.ஜ., உறுப்பினர் ஹரிஷ் பூஞ்சா வருத்தமாக பேசினார்.
'கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கிளையை தார்வாடில் இருந்து மங்களூருக்கு மாற்றினால், உத்தர கன்னடா மாவட்ட மக்களுக்கு சிரமம்; குமட்டாவுக்கு மாற்றினால் நல்லது' என, பா.ஜ., உறுப்பினர் தினகர் கேசவ் ஷெட்டி கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சி துணை தலைவர் அரவிந்த் பெல்லத் எதிர்ப்பு தெரிவித்தார். 'அனைவரும் என்னை வந்து சந்தித்து கடிதம் கொடுங்கள்' என, முதல்வர் கூறினார்
'சபாநாயகராக இருந்த ஜெக தீஷ் ஷெட்டர் முதல்வர் ஆனார்; சபாநாயகர் நாற்காலியில் இருப்போருக்கு வருங்காலத்தில் பெரிய பதவி கிடை க்கும்' என்று, முதல்வர் சிவகுமார் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் அசோக், சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீலை பார்த்து, 'உங்களுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளதா' என்று கேள்வி எழுப்பியதால், அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
