தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லால்பாக் மலர் கண்காட்சி போட்டி  27 முதல் விண்ணப்பம் வினியோகம் 

 லால்பாக் மலர் கண்காட்சி போட்டி  27 முதல் விண்ணப்பம் வினியோகம் 

 லால்பாக் மலர் கண்காட்சி போட்டி  27 முதல் விண்ணப்பம் வினியோகம் 


ADDED : ஜூலை 24, 2026 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சுதந்திர தினத்தை முன்னிட்டு, லால்பாக்கில் நடக்கும் மலர் கண்காட்சியை ஒட்டி பல்வேறு போட்டிகளில் பங்கேற்க விரும்புவோருக்கான விண்ணப்பங்கள், 27ம் தேதி முதல் வினியோகிக்கப்படுகின்றன.

குடியரசு, சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, அடுத்த மாதம் 6ம் தேதி முதல், 17ம் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சியின் போது தோட்ட கலை துறை சார்பில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதாவது வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களின் மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பது; காய்கறி மற்றும் மூலிகை செடிகள், இக்பானா உள்ளிட்ட தோட்டக்கலை பிரிவு சார்ந்த போட்டிகள் லால்பாக்கில் நடக்கும். போட்டியில் பங்கேற்போர், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், தனி அரங்கும் ஒதுக்கப்படும்.

இந்த ஆண்டு மலர் கண்காட்சியின் போது, தோட்ட கலை தொடர்பான பல்வேறு போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்களுக்காக விண்ணப்பங்கள், வரும் 27ம் தேதி முதல், அடுத்த மாதம் 4ம் தேதி வரை வினியோகம் செய்யப்படுகின்றன. விண்ணப்பிக்க சமர்ப்பிக்க ஆகஸ்ட் 4 ம் தேதி கடைசி நாள்.

போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், லால்பாக்கில் உள்ள தோட்ட கலை துறை கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் இருந்து, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். https://horticulturedir.karnataka.gov.in என்ற இணைய முகவரியிலும் விண்ணப்பித்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இம்மாதம் 31ம் தேதி கடைசி நாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us