பி.எம்.டி.சி., அரசு பஸ்களில் கியு.ஆர்., குறியீடு விளம்பரம்
பி.எம்.டி.சி., அரசு பஸ்களில் கியு.ஆர்., குறியீடு விளம்பரம்
ADDED : ஜூலை 24, 2026 01:06 AM
பெங்களூரு: வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பி.எம்.டி.சி., பஸ்களில் சீட்களுக்கு பின்புறம் விளம்பரங்களை காட்சிபடுத்தும் கியு.ஆர்., குறியீடு ஒட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தில் 6,000க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன.
பி.எம்.டி.சி., டிக்கெட் கட்டணம் மட்டுமின்றி விளம்பரங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் 241 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது.
பஸ்களில் சீட்களின் பின்புறத்தில் கியு.ஆர்., குறியீடு மூலம் விளம் பரங்களை காட்சிப்படுத்த திட்டமிட்டு உள்ளது. மொபைல் போன்கள் மூலம் கியு.ஆர்., குறியீடுகளை 'ஸ்கேன்' செய்தால் விளம்பரங்களை மொபைலில் பார்க்கலாம்.
அருகிலுள்ள கடைகள், சூப்பர் மார்க்கெட், பர்னிச்சர் கடைகளில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் பொருட்கள் காட்சிப்படுத்தப்படும். ஏதேனும் பொருட்கள் தேவையிருந்தால் இணையதளம் மூலம் பயணியர் 'ஆர்டர்' செய்து கொள்ளலாம் அல்லது கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்கலாம்.
இதற்காக விளம்பர நிறுவனங்கள் செலுத்தும் கட்டணம் மூலம் பி.எம்.டி.சி.,க்கு ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான டெண்டர் விரைவில் வெளியாகும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
