/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நீதிபதிகள் இடமாற்றம் வக்கீல்கள் இன்று போராட்டம்
/
நீதிபதிகள் இடமாற்றம் வக்கீல்கள் இன்று போராட்டம்
ADDED : ஏப் 22, 2025 05:05 AM
பெங்களூரு: கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெங்களூரு வக்கீல்கள் சங்கம் இன்று போராட்டம் நடத்துகிறது.
உச்ச நீதிமன்ற கொலிஜியம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித்தை ஒடிசாவுக்கும்; நீதிபதி நடராஜனை கேரளாவுக்கும்; நீதிபதி சஞ்சய் கவுடாவை குஜராத்துக்கும்; நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடரை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்துக்கும் மாற்றி உத்தரவிட்டது.
இந்த மாற்றத்துக்கு, பெங்களூரு வக்கீல்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று பெங்களூரு வக்கீல்கள் சங்க தலைவர் விவேக் ரெட்டி அளித்த பேட்டி:
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக, நேற்று மூத்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இன்று சங்க பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். கூட்டத்துக்கு பின், நீதிபதிகள் இடமாற்ற உத்தரவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, திரும்பப் பெறக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நுழைவு வாயில் முன் பெரிய அளவில் போராட்டம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.