தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுத்தை தாக்கி மான் பலி

 சிறுத்தை தாக்கி மான் பலி

 சிறுத்தை தாக்கி மான் பலி


ADDED : ஜூலை 29, 2026 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 11:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பங்கார்பேட்டை: சிறுத்தை தாக்கியதில், மான் பலியானது.

பங்கார்பேட்டையின் ஹாரோ ஹள்ளி மற்றும் வரதாப்புரா இடையே அவ்வப்போது யானைகள் நடமாடி விளைபொருட்களை நாசமாக்கி வருவது வழக்கமாக இருந்தது.

யானைகள் மட்டுமின்றி சிறுத்தைகள் நடமாட்டமும் இருப்பதாக, அப்பகுதி மக்கள் கூறியதை அடுத்து, இரவு நேரத்தில் தனியாக செல்வதை பலரும் தவிர்த்து வருகின்றனர்.

நேற்று காலை, புள்ளி மான் ஒன்றை சிறுத்தை, அடித்து கொன்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது. சிறுத்தையை பிடித்து செல்லுமாறு வனத் துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் புகார் செய்தனர்.

வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை காலடி தடயங்களை ஆய்வு செய்தனர். விரைவில் சிறுத்தையை பிடித்து விடுவோம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us