தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மரம் விழுந்ததில் இரு பெண்கள் பலி  

 மரம் விழுந்ததில் இரு பெண்கள் பலி  

 மரம் விழுந்ததில் இரு பெண்கள் பலி  


ADDED : ஜூலை 29, 2026 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 11:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குடகு: காபி தோட்டத்தில் மரம் விழுந்ததில், அசாம் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

குடகு மாவட்டம், சோம்வார்பேட் தாலுகாவில் பிலிகெரே கிராமம் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் பல மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணிபுரிகின்றனர்.

நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இருப்பினும், தொழிலாளர்கள் வழக்கம் போல பணிபுரிந்தனர். அப்போது, திடீரென பல ஆண்டுகள் பழமையான பெரிய மரம் ஒன்று, நான்கு தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இதை பார்த்த சக ஊழியர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், அசாம் மாநிலத்தை சேர்ந்த அலீமன், 48, பர்தீனா கர்த்தாராம், 32, ஆகிய இரண்டு பெண் தொழிலாளர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மீதமுள்ள இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தை சோம்வார்பேட் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டார். அவர் கூறியதாவது:

தனியார் காபி தோட்டங்களில் உள்ள பழமையான மரங்களை அகற்றுமாறு தோட்ட உரிமை யாளர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும், பழைய மரங்கள் அகற்றப்படாததாலேயே விபத்து நடந்து உள்ளது. இது குறித்து தோட்ட உரிமையாளிடம் விசாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us