ADDED : ஜூன் 01, 2026 12:22 AM
அ நிறம் | அளவு
மைசூரு: கிராம மக்களை அச்சுறுத்திய சிறுத்தை, கூண்டில் சிக்கி உள்ளது.
மைசூரின் எச்.டி.கோட் தாலுகா ஜி.ஜி.காலனி, யோகேஸ்வர காலனி கிராமங்கள், வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. கடந்த சில தினங்களாக சிறுத்தை ஒன்று கிராமங்களுக்குள் புகுந்து, ஆடு, மாடுகளை வேட்டையாடி வந்தது.
பீதி அடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்பட்டனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு வைத்தது. அதற்குள் இரையாக நாய் கட்டப்பட்டு இருந்தது. நேற்று காலை கூண்டின் அருகே வந்த சிறுத்தை, நாயை வேட்டையாட முயன்ற போது கூண்டில் சிக்கியது.
