தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேடை தடுப்புக்கு கடிதம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேடை தடுப்புக்கு கடிதம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேடை தடுப்புக்கு கடிதம்


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேடை தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடாவுக்கு, பா.ஜ., – எம்.பி., தேஜஸ்வி சூர்யா கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹொசஹள்ளி மெட்ரோ ரயில் நிலைய தண்டவாளத்தில் பயணி தவறி விழுந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோன்று, கூட்டநெரிசல் காரணமாக 2024ம் ஆண்டு 17 பேர் தண்டவாளத்தில் தவறி விழுந்தனர்.

இச்சம்பவங்கள் பயணியரின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

பயணியரின் பாதுகாப்பு கருதி, பெங்களூரில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேடை தடுப்புகள் அமைக்க வேண்டும். இந்த விஷயத்தின் தீவிரத்தை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் புரிந்து கொள்ள வேண்டும்.

நடைமேடை தடுப்புகள் அமைப்பது தொடர்பாக, ஏற்கனவே இரண்டு முறை கோரிக்கை வைத்து உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us