தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சொன்னதை மறக்கும் ராகுல் மஹா., முதல்வர் கிண்டல்

சொன்னதை மறக்கும் ராகுல் மஹா., முதல்வர் கிண்டல்

சொன்னதை மறக்கும் ராகுல் மஹா., முதல்வர் கிண்டல்


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: ‘‘காங்கிரஸ் தலைவர் ராகுல், இன்று பேசிய விஷயத்தை, நாளை மறந்துவிடும் கஜினி போன்று இருக்கிறார். தினமும் பொய் சொல்கிறார்,’’ என மஹாராஷ்டிர முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்.

பெலகாவியில் பா.ஜ., சார்பில், நேற்று ஏற்பாடு செய்த ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள், அராஜகத்தை அகற்றுங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் தேவேந்திர பட்னவிஸ் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை, வேறு நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய தலைவர், உலகத்தின் என நினைத்து கொண்டவர்கள், மோடியின் தலைமையை பார்த்து அஞ்சுகின்றனர்.

உலகின் வலுவான நாடுகளின் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 2047க்குள் இந்தியா, உலகின் வல்லரசு நாடாக இருக்கும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், சிவப்பு நிற அரசியலமைப்பு புத்தகத்தை கையில் பிடித்து கொண்டு நடமாடுகிறார். ஆனால் அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பு புத்தகம் நீல நிறத்தில் உள்ளது. ராகுல் இன்று பேசிய விஷயத்தை, நாளை மறந்துவிடும் கஜினி போன்று இருக்கிறார். தினமும் பொய் சொல்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us