/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாயை திட்டியவரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
/
தாயை திட்டியவரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
ADDED : மார் 27, 2025 05:25 AM
மாண்டியா: தன் தாயை ஆபாசமாக திட்டியவரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவின், சிக்கபாகிலு கிராமத்தில் வசிப்பவர் பசுபதி, 3-0. இவரது தாய்க்கு, இதே பகுதியில் வசித்த கிரிஷ், பல விதங்களிலும் தொந்தரவு கொடுத்தார்.
பல முறை எச்சரித்தும் பயன் இல்லை. 2018 செப்டம்பர் 29ம் தேதி காலை, ஏதோ காரணத்தால் கிரிஷ், பசுபதியின் தாயை ஆபாசமாக திட்டினார்.
இந்த விஷயம் பசுபதிக்கு தெரிந்தது. கோபமடைந்த அவர், கோடாரியால் கிரிஷின் தலையை வெட்டினார். தலையை பைக்கின் பெட்ரோல் டாங்க் மீது வைத்துக் கொண்டு, பெலகவாடி போலீஸ் நிலையத்துக்கு வந்து, சரணடைந்தார்.
இந்த சம்பவம் கிராமத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவரை கைது செய்த போலீசார், விசாரணையை முடித்து, மலவள்ளியின் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், ஆயுள் தண்டனை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.