/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'குப்பை கொட்டினால் கிரிமினல் வழக்கு பாயும்'
/
'குப்பை கொட்டினால் கிரிமினல் வழக்கு பாயும்'
ADDED : ஆக 14, 2025 11:15 PM

பெங்களூரு: ''கண்ட, கண்ட இடங்களில் குப்பை வீசுவோர் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்,'' என உள்ளாட்சி துறை அமைச்சர் ரஹீம்கான் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் கோவிந்தராஜு கேள்விக்கு பதில் அளித்து, அமைச்சர் ரஹீம்கான் கூறியதாவது:
கோலாரின் கெந்தட்டி கிராமத்தின் பத்து ஏக்கர் நிலத்தில் திடக்கழிவு நிர்வகிப்பு மையம் அமைக்கப்படும். இம்மையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, கோலார் நகராட்சி ஏற்கும். இம்மையத்தில் தினமும் 35 டன் ஈரக்கழிவுகளை, உரமாக மாற்றி, 'கோலார் அக்ரி கோல்டு' என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படும்.
மனிகட்டா சாலை அருகிலும், கெந்தட்டி திடக்கழிவு சேகரிப்பு மையத்திலும் உரம் தயாரித்து விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்படும்.
கண்ட, கண்ட இடங்களில் குப்பை வீசுவோர் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். இது குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சட்டவிரோதமாக குப்பை கொட்டும் இடங்களை, அடையாளம் கண்டு, அந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அங்கு குப்பை கொட்டுவோரிடம் அபராதம் விதிக்கப்படும். கிரிமினல் வழக்கும் பதிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.