/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார் கூட்டுறவு வங்கியில் லோக் ஆயுக்தா சோதனை
/
கோலார் கூட்டுறவு வங்கியில் லோக் ஆயுக்தா சோதனை
ADDED : மே 27, 2025 11:49 PM
கோலார்: கோலார் -- சிக்கபல்லாபூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கோவிந்த கவுடா வீடு உட்பட 11 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடந்தது.
டி.சி.சி., எனும் கோலார் -- சிக்கபல்லாபூர் மத்திய கூட்டுறவு வங்கியின் 12 இயக்குனர்களுக்கான தேர்தல் இன்று கோலாரில் நடக்கிறது. இன்று மாலையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இநத பரபரப்பான சூழ்நிலையில், வங்கியில் நிதி மோசடி தொடர்பான புகார்களின் அடிப்படையில், லோக் ஆயுக்தா போலீசார், நேற்று கோலார், சிக்கபல்லாபூரில் அதிரடி சோதனை நடத்தினர்.
கோலார் மாவட்டத்தின் பைலஹள்ளியில் உள்ள டி.சி.சி., வங்கி தலைவர் கோவிந்த கவுடாவின் வீடு, கோலாரில் உள்ள டி.சி.சி., வங்கி உட்பட மூன்று இடங்கள், சிந்தாமணியில் உள்ள எட்டு விவசாய கூட்டுறவு வங்கிகள் என 11 இடங்களில் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 11 குழுக்களை சேர்ந்த 125 பேர் அதிரடி சோதனை நடத்தினர்.
ஒரே நேரத்தில் காலை 9:00 மணிக்கு சோதனை துவங்கியது. இந்த சோதனை இரவும் தொடர்ந்தது.
தொடர்பு?
குமாரசாமி கர்நாடக முதல்வராக இருந்த போது விவசாய கடன் தள்ளுபடி செய்தார். இவ்வேளையில், கோலார் - சிக்கபல்லாப்பூர் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன
சிக்கபல்லாப்பூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவில், விவசாயிகளுக்கான மானியத் தொகையில் லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்ததாக பிரதாப் என்பவர் அளித்த புகாரின்படி, கோலார் எஸ்.பி., தனஞ்செயா தலைமையில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது
கூட்டுறவு வங்கி தேர்தலுக்கு முந்தைய நாள் என்பதால் பரபரப்பு நிலவியது. இதில் சில காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று வாக்காளர்களை ஈர்க்க, தேர்தல் களத்தில் இருந்தோர் பல வகை தந்திரங்களில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் 11 கோடி ரூபாய் முறைகேடு நடந்தற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.