/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சொத்து குவித்த 4 அதிகாரிகள் லோக் ஆயுக்தா அதிரடி 'ரெய்டு'
/
சொத்து குவித்த 4 அதிகாரிகள் லோக் ஆயுக்தா அதிரடி 'ரெய்டு'
சொத்து குவித்த 4 அதிகாரிகள் லோக் ஆயுக்தா அதிரடி 'ரெய்டு'
சொத்து குவித்த 4 அதிகாரிகள் லோக் ஆயுக்தா அதிரடி 'ரெய்டு'
ADDED : மே 09, 2025 12:48 AM
பெங்களூரு: கர்நாடக அரசின் வருவாய் துறைக்கு உட்பட்ட நில பாதுகாப்பு துறை கோலார் அலுவலகத்தில், நில அளவை சூப்பிரண்டாக பணியாற்றும் சுரேஷ் பாபு, யாத்கிர் சுர்புர் தாலுகா சுகாதார அதிகாரி ராஜா வெங்கடப்பா நாயக்.
தாவணகெரேயில் நகர குடிநீர் வழங்கல் துறையில் உதவி இன்ஜினியராக வேலை செய்யும் ரவி, பெங்களூரு மஹாதேவபுராவில் நீர்பாசனத்துறையில் உதவி இன்ஜினியராக பணி செய்யும் சீனிவாஸ் மூர்த்தி ஆகிய நான்கு பேரும் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லோக் ஆயுக்தா போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது.
அந்த புகாரின் அடிப்படையில் நான்கு அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில், நேற்று சோதனை நடந்தது. வீடுகளில் இருந்த நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சொத்து வாங்கி குவித்ததற்கான ஆவணங்களும் சிக்கின. அனைத்தையும் லோக் ஆயுக்தா போலீசார் எடுத்து சென்றனர். எவ்வளவு நகை, பணம் சிக்கியது என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.