/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'காதல் மன்னன்' டாக்டர் மகேந்திர ரெட்டி புது காதலிக்காக மனைவியை கொன்றது அம்பலம்
/
'காதல் மன்னன்' டாக்டர் மகேந்திர ரெட்டி புது காதலிக்காக மனைவியை கொன்றது அம்பலம்
'காதல் மன்னன்' டாக்டர் மகேந்திர ரெட்டி புது காதலிக்காக மனைவியை கொன்றது அம்பலம்
'காதல் மன்னன்' டாக்டர் மகேந்திர ரெட்டி புது காதலிக்காக மனைவியை கொன்றது அம்பலம்
ADDED : அக் 21, 2025 04:20 AM

மாரத்தஹள்ளி: காதல் மன்னனாக வலம் வந்த டாக்டர் மகேந்திர ரெட்டி, உடுப்பி மணிப்பாலில் வேலை செய்யும் பெண் டாக்டரை திருமணம் செய்வதற்காக, மனைவியை கொன்றது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு மாரத்தஹள்ளியைச் சேர்ந்த டாக்டர் கிருத்திகா ரெட்டி, 28, கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி இறந்தார். அவரது உடலில் அளவுக்கு அதிகமாக ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தி கொன்றதாக, கணவரான டாக்டர் மகேந்திர ரெட்டி, ஆறு மாதங்களுக்கு பின், கடந்த 15ம் தேதி கைது செய்யப்பட்டார்.
'புரோபோபால்' எனும் மயக்க மருந்தை உடலில் செலுத்தியது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிந்தது. புரோபோபால் மருந்து, மருத்துவமனையின் ஐ.சி.யு.,வில் பயன்படுத்தக் கூடியது. இது எளிதில் கிடைக்காது. மகேந்திர ரெட்டி டாக்டர் என்பதால், தான் வேலை செய்த விக்டோரியா மருத்துவமனையில் இருந்து எடுத்து சென்றாரா என்றும் கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
'பிரிஸ்கிரிப்ஷன்' டாக்டரான மகேந்திர ரெட்டி, கடந்த ஏப்ரல் 22ம் தேதி மதியம் குஞ்சூரில் உள்ள தன் வீட்டில் இருந்து, மாரத்தஹள்ளி முனேகொலலுவில் உள்ள மனைவி கிருத்திகா வீட்டிற்கு சென்று உள்ளார். செல்லும் வழியில் வர்த்துார் பகுதியில் உள்ள மருந்து கடைக்கு சென்று, புரோபோபால் மயக்க மருந்து கேட்டுள்ளார். ஆனால், அங்குள்ள ஊழியர் கொடுக்க மறுத்துள்ளார்.
அந்த ஊழியரிடம், என் பெயர் மகேந்திர ரெட்டி; நான் டாக்டராக உள்ளேன்; என்னிடம் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டி உள்ளது என்று கூறி உள்ளார். 'பிரிஸ்கிரிப்ஷனை' காட்டி இருக்கிறார். இதன் பின் அவர், மயக்க மருந்தை எடுத்து கொடுத்து உள்ளார்.
மனைவி வீட்டிற்கு சென்றதும், அவரது காலில் பொருத்தப்பட்டு இருந்த ஐ.வி., ஊசிக்குள், மயக்க மருந்தை செலுத்தி உள்ளார். அளவுக்கு அதிகமாக மயக்க மருந்தை செலுத்தியதால், கிருத்திகா சுயநினைவை இழந்து உள்ளார். இதை பொருட்படுத்தாமல் அங்கேயே துாங்கி உள்ளார்.
காதல் மன்னன் மறுநாள் காலையில் எழுந்து, ஒன்றும் தெரியாதவர் போல புறப்பட்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து கிருத்திகாவின் அறைக்கு, அவரது குடும்பத்தினர் சென்று பார்த்த போது, கிருத்திகா மயக்க நிலையில் இருந்தது தெரிந்தது. பின், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. மேற்கண்ட தகவலை போலீஸ் முன், மகேந்திர ரெட்டியே கூறி உள்ளார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சில தகவல்கள் தெரியவந்து உள்ளன. அதாவது கல்லுாரியில் படிக்கும் போதே மகேந்திர ரெட்டி, தன்னுடன் படித்த பெண்ணை காதலித்து உள்ளார். இந்த காதல், 'பிரேக் அப்'பில் முடிந்துள்ளது. படித்து முடித்துவிட்டு, துபாயில் டாக்டராக வேலை செய்த போது, அங்கு வேலை செய்த இந்திய வம்சாவளி பெண் டாக்டர், நர்சையும் ஒரே நேரத்தில் மகேந்திர ரெட்டி காதலித்து, காதல் மன்னனாக வலம் வந்துள்ளார்.
துபாயில் இருந்து பெங்களூரு வந்தவர், தன் சகோதரரின் காதலியின் தோழியையும் காதலித்து உள்ளார். பின், கிருத்திகா ரெட்டியை திருமணம் செய்து உள்ளார். திருமணத்திற்கு பின், உடுப்பி மணிப்பாலில் வேலை செய்யும் பெண் டாக்டரை காதலித்தார். இவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில், கிருத்திகாவை கொன்றதும் தெரிய வந்துள்ளது.