/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பணம் சம்பாதிக்க மேஜிக் பண்ணல' கன்னியாகுமரி பேபி ஜெபக்குமார் உருக்கம்
/
'பணம் சம்பாதிக்க மேஜிக் பண்ணல' கன்னியாகுமரி பேபி ஜெபக்குமார் உருக்கம்
'பணம் சம்பாதிக்க மேஜிக் பண்ணல' கன்னியாகுமரி பேபி ஜெபக்குமார் உருக்கம்
'பணம் சம்பாதிக்க மேஜிக் பண்ணல' கன்னியாகுமரி பேபி ஜெபக்குமார் உருக்கம்
ADDED : டிச 12, 2025 06:49 AM

''மாயவித்தை கண்காட்சியை குட்டி சாத்தான் நிகழ்ச்சி என்று, சிலர் சொல்வது மனதுக்கு வருத்தமாக உள்ளது,'' என்று, கன்னியாகுமரி பேபி ஜெபக்குமார் உருக்கமாக கூறினார்.
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், பெங்களூரில் நடக்கும் 4 வது புத்தக கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த புத்தக கண்காட்சியின் வெற்றிக்கு புத்தகங்கள் முக்கிய காரணமாக இருந்தாலும், தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்த பேபி ஜெபக்குமாரின் மாயவித்தை கண்காட்சியும் ஒன்று.
கேரளாக்காரர் பெற்றோருடன் வந்து புத்தகங்களை பார்ப்பதுடன், இளஞ்சிட்டுகளுக்கு பேபி ஜெயக்குமாரின் மாயவித்தை கண்காட்சி ஆறுதலாக இருந்தது.
கையில் பணத்தை வைத்து அதை புறாவாக மாற்றுவது; காதின் மேல் பகுதியில் இருந்து சில்லரை எடுத்து கொடுப்பது உட்பட அவர் செய்யும் பல மாயவித்தைகள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தன.
இந்த ஆண்டும் நேற்றும், இன்றும் மாயவித்தை கண்காட்சி நடக்கிறது. நேற்று மதியம் கண்காட்சிக்கு தயாராகி கொண்டு இருந்தவரை, நமது நாளிதழ் சார்பில் சந்தித்தோம்.
'தினமலர்' என்று கூறியதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, கன்னியாகுமரி பாஷையில் பேசி வரவேற்றார். தனது மாயவித்தை கண்காட்சி குறித்து மனம் விட்டு பேசினார்.
எனது சொந்த ஊரு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பக்கத்துல திருவட்டார். சின்ன வயசுலே இருந்தே நான் மேஜிக் செய்யல. ஸ்டவ் உதிரிபாகம் வித்துட்டு இருந்தேன். அறிவியல் சார்ந்த இயக்கமும் எங்க ஊருல ஒரு குழு வச்சு இருக்கோம். அந்த குழுவுல நடக்குற நிகழ்ச்சிக்கு, கேரளாகாரரு ராஜிவ் வருவாரு; அவரு நல்ல மேஜிக் பண்ணுவாரு.
மேஜிக்கை கூர்ந்து கவனிச்சதுனால, எனக்கும் அது மேல ஆசை. ஏலே மக்கா நாமும் மேஜிக்கில் ஒரு அசத்து அசத்திடுவோம்னு, என் மனுசுல சொல்லி கிட்டேன். ராஜிவ் கிட்ட வித்தைய கத்துகிட்டு, இப்போ 12 ஆண்டா மேஜிக் பண்ணுறேன். நம்ம நாட்டுல மட்டுமல்லாம, வெளிநாடுகளில் கூட மேஜிக் பண்ணி இருக்கேன். இதுவரை 2,200 மேஜிக் ஷோ நடத்தி இருப்பேன்.
பயிற்சி டாக்டர் மேஜிக்கை பணம் சம்பாதிக்க மட்டும் நாங்க பண்ணுறோம்னு, நீங்க நினைச்சிக்க வேண்டாம்யா... மேஜிக் மூலமா போதை, பிளாஸ்டிக் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துறோம். நான் பெரிசா எதுவும் படிக்கல. பிளஸ் 2 வோட நின்னுகிட்டேன்.
ஆனாலும் என்னோட பிள்ளைகள நல்ல படிக்க வைச்சி இருக்கேன். மகன் அறிவுநிதி வெளிநாட்டுல இருக்காப்பல. மகள் அன்பரசி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரில பயிற்சி டாக்டரு.
நாங்க பண்ணுற மேஜிக்க சில பேரு கிண்டல் பண்ணுறாங்க. குட்டி சாத்தான் நிகழ்ச்சின்னு கிண்டல் அடிக்குறாங்க. இது மனசுக்கு கஷ்டமா இருக்கு. கேரளாவுல பள்ளி கூடத்துல மேஜிக் ஷோ நடத்த நிதி ஒதுக்குறாங்க.
இதுபோல தமிழக அரசு நிதி ஒதுக்க, உங்க பத்திரிகை சார்புல ஏதாவது உதவி செஞ்சினாங்கன்னா நல்லா இருக்கும் என்று, படபடவென சரவெடி போல பேசி முடிச்சிட்டாரு.
தொடர்புக்கு:
94872 75631
- நமது நிருபர் -

