தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாலசோமேஸ்வரர் கோவிலில் மஹா சண்டி ஹோமம்

 பாலசோமேஸ்வரர் கோவிலில் மஹா சண்டி ஹோமம்

 பாலசோமேஸ்வரர் கோவிலில் மஹா சண்டி ஹோமம்


ADDED : பிப் 06, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: உரிகம் பேட்டையில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, சோழர் காலத்து காமாட்சி சமேத ஸ்ரீ பிரசன்ன பால சோமேஸ்வரர் சுவாமி கோவிலில், ஸ்ரீ மஹா சண்டி ஹோமம், நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.

கர்நாடக அரசின் ஹிந்து அறநிலைய துறை கோவில்களில் ஒன்றான, பால சோமேஸ்வரர் கோவிலில், மக்கள் நலனுக்காக மகா சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது. நாளை சனிக்கிழமை மாலை, 4:00 மணிக்கு மங்கள வாத்தியம், ஸ்ரீ கணபதி பிரார்த்தனை, சுவஸ்திக் பூரணவாச்சனா, பூஜைகள் நடைபெறும்.

இதையடுத்து, சோமேஸ்வரர் பிளாக் பகுதியில் உள்ள படவட்டம்மன் கோவிலில், ஸ்ரீகங்கா பூஜை நிறைவேற்றுதல், அதன்பின், பால சோமேஸ்வரர் கோவிலில் கோ பூஜை, காமாட்சி சமேதா பால சோமேஸ்வரர் கோவிலுக்குள் யாக சாலைப்பிரவேசம், கலச ஸ்தாபனம், வேத பாராயணம், சண்டிகா பாராயணம், மகா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், பூர்ணாஹுதி, மகா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம் நடைபெறும்.

நாளை மறுநாளான, 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7:00 மணிக்கு- மங்கள வாத்தியம், வேதபாராயணம், தேவத்தா பூஜை, மகா சண்டி பாராயணம், ஹோமம், குமாரிகள் பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, மகா பூர்ணாஹுதி, மதியம் 12:00 மணிக்கு மகா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம் நடக்கிறது.

யாக பூஜைக்கான ஏற்பாடுகளை கோவிலின் முதன்மை அர்ச்சகர் மஞ்சுநாத் தீக்ஷித், பெங்களூரு விஸ்வாஸ் தீக்ஷித் சிவாச்சாரியார், நிதிஷ் பரத்வாஜ் ஆகியோர் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us