தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சுற்றுலா பயணியரை ஈர்க்கும் மஜாலி கடற்கரை

சுற்றுலா பயணியரை ஈர்க்கும் மஜாலி கடற்கரை

சுற்றுலா பயணியரை ஈர்க்கும் மஜாலி கடற்கரை


UPDATED : நவ 05, 2026 11:51 PM

ADDED : நவ 04, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:51 PM ADDED : நவ 04, 2026 07:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில் இருந்து 10 கி.மீ., தொலைவில், மஜாலி கடற்கரை உள்ளது. இது, கர்நாடகத்தின் வடக்கு முனையில், கோவாவுக்கு தெற்கில் அமைந்துள்ள சிறிய கடலோர நகரமான மஜாலி கிராமத்தில் உள்ளது. 4.5 கி.மீ., நீளமுள்ள இந்த கடற்கரை, தேவ்பாக் கடற்கரைக்கு வடக்கே அமைத்துள்ளது.

அமைதியான, அழகாக தனித்து நிற்கும் மஜாலி கடற்கரை, அதன் மென்மையான பொன்னிற மணல், அமைதியான, ஆழமற்ற நீர் போன்றவை சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்கின்றன. பரபரப்பான வாழ்க்கையில் இருந்து சிறிது நேரம் அமைதியை விரும்பும் குடும்பத்தினர், குழந்தைகள் என அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்கும்.

இங்கு இயற்கையாகவே பாறை தடுப்புகள் உள்ளன. நீச்சல், பல்வேறு மோட்டார் அல்லாத நீர் சாகசங்களுக்கும், கயாக்கிங், படகு சவாரிக்கு சிறந்த இடமாகும். இந்த கடற்கரையை சுற்றிலும், சிறிய மீனவ கிராமங்கள் அமைந்து உள்ளன. இதன் அருகில் ஓடும் கால்வாய்களில், காலை நேரத்தில் பறவைகள் காணலாம்.

எப்படி செல்வது?


l விமானத்தில் செல்வோர், கோவா விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 90 கி.மீ., தொலைவில் உள்ள மஜாலி கடற்கரைக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்
l ரயிலில் செல்வோர், கார்வார் ரயில் நிலையத்தில் இறங்கிருந்து, அங்கிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள மஜாலி கடற்கரைக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்
l பஸ்சில் செல்வோர், கார்வார் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 11 கி.மீ., தொலைவில் உள்ள மஜாலி கடற்கரைக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us