/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மலேஷியாவின் சர்வதேச டேக்வாண்டோ நாட்டுக்கு பெருமை சேர்த்த மாணவி
/
மலேஷியாவின் சர்வதேச டேக்வாண்டோ நாட்டுக்கு பெருமை சேர்த்த மாணவி
மலேஷியாவின் சர்வதேச டேக்வாண்டோ நாட்டுக்கு பெருமை சேர்த்த மாணவி
மலேஷியாவின் சர்வதேச டேக்வாண்டோ நாட்டுக்கு பெருமை சேர்த்த மாணவி
ADDED : மே 04, 2025 11:35 PM

ராம்நகர்: மலேசியாவில் நடந்த சர்வதேச டேக்வாண்டோ போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற ௭ வயதான மாணவி, தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ராம்நகர் மாவட்டத்தின் அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சதீஷ், சைத்ரா தம்பதி. இவர்களின் மகள் சான்வி சதீஷ், 7. சிறுவயதில் இருந்தே மகளை டேக்வாண்டோ பயிற்சிக்கு தந்தை அனுப்பினார்.
மலேசியாவில் மே 1ம் தேதி முதல் நேற்று வரை நடந்த சர்வதேச டேக்வாண்டோ போட்டி நடந்தது. இதில், இந்தியா, வங்கதசேம், மியான்மர், சிரியா, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 65 பேர் கொண்ட இந்திய அணியில் சான்வியும் பங்கேற்றார்.
இந்தியா சார்பில் 23, 27 கிலோ பிரிவில் பங்கேற்ற சான்வி, தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்று வெற்றி பெற்றார்.
இதற்கு முன்னர் துபாய், உஸ்பெகிஸ்தான், ஆசியா சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளிப்பதக்கங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவரின் வெற்றிக்கு மாவட்ட கலெக்டர் யஷ்வந்த் குருகர் உட்பட பல பாராட்டு தெரிவித்துள்ளனர்.