/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெளிநாட்டு வேலை பெயரில் ரூ.1.82 கோடி ஏமாற்றியவர் கைது
/
வெளிநாட்டு வேலை பெயரில் ரூ.1.82 கோடி ஏமாற்றியவர் கைது
வெளிநாட்டு வேலை பெயரில் ரூ.1.82 கோடி ஏமாற்றியவர் கைது
வெளிநாட்டு வேலை பெயரில் ரூ.1.82 கோடி ஏமாற்றியவர் கைது
ADDED : மே 20, 2025 11:31 PM

தட்சிண கன்னடா : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபர்களிடம் 1.82 கோடி ரூபாய் ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் கூறியதாவது:
மங்களூரில் உரிய அனுமதி இல்லாமல், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக, 'ஹேர்குளோ எலிகன்ட் ஓவர்சீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில், மும்பையை சேர்ந்த மசியுல்லா அதிவுல்லா கான், 36, நிறுவனம் நடத்தி வருவதாக மங்களூரு நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில், 2024 டிசம்பரில் குடியேற்ற அதிகாரிகள் புகார் அளித்திருந்தனர்.
ஆனால், போலீசார் விசாரிக்காமல் அலட்சியம் காண்பித்து உள்ளனர்.
இதற்கிடையில், அந்நபர் மீது, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக, 1.62 லட்சம் ரூபாய் ஏமாற்றி விட்டதாகவும் சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் பதிவாகி இருந்தது.
இவ்விரு புகார் குறித்து விசாரணை நடத்திய சி.சி.பி., போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல வாலிபர்களை ஏமாற்றி, 1.82 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
குடியேற்ற அதிகாரிகள் புகார் செய்தபோது, முறையாக விசாரிக்காத மங்களூரு நகர கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சோமசேகர், சப் - இன்ஸ்பெக்டர் உமேஷ் குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.