/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
' ஷாப்பிங்' சென்றதால் தகராறு மனைவியை கொன்றவர் கைது
/
' ஷாப்பிங்' சென்றதால் தகராறு மனைவியை கொன்றவர் கைது
' ஷாப்பிங்' சென்றதால் தகராறு மனைவியை கொன்றவர் கைது
' ஷாப்பிங்' சென்றதால் தகராறு மனைவியை கொன்றவர் கைது
ADDED : ஜூலை 10, 2025 03:41 AM

பொம்மனஹள்ளி: கோலார் மாவட்டம், சீனிவாசப்பூரை சேர்ந்தவர்கள் ஹரிஷ், 29, பத்மஜா, 29. இன்ஜினியரிங் பட்டதாரிகள். இருவரும், கல்லுாரியில் படிக்கும் போதே காதலித்தனர். கல்லுாரி முடித்த பின், பெங்களூரு பொம்மனஹள்ளியில் தனியார் நிறுவனத்தில், ஒன்றாக வேலை செய்தனர். இவர்களின் காதல் விவகாரம் பற்றி அறிந்த இருவீட்டாரும் பேசி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் செய்து வைத்தனர்.
தம்பதிக்கு குழந்தை இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு, ஹரிஷ் வேலையை விட்டார். வேறு இடத்தில் வேலை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.
இதனால் வீட்டிலேயே இருந்தார். பத்மஜா மட்டும் வேலைக்கு சென்று வந்தார். தன் அன்றாட தேவைக்கு கூட, மனைவியிடம் இருந்து பணம் வாங்கி, செலவு செய்து வந்துள்ளார்.
வேலை கிடைக்காத கோபம், விரக்தியில் இருந்த ஹரிஷுக்கு, வேலைக்கு செல்லும் மனைவி மீது கோபம் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே, சில தினங்களாக தகராறு ஏற்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பத்மஜா, ஹரிஷிடம் எதுவும் சொல்லாமல் மாலுக்கு, ஷாப்பிங் சென்றுள்ளார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தார்.
'எனக்கு வேலை இல்லை என்பதால் என்னை நீ மதிக்கவில்லை. என்னிடம் சொல்லாமல் எதற்காக ஷாப்பிங் சென்றாய்?' என பத்மஜாவிடம், ஹரிஷ் தகராறு செய்து தாக்கி உள்ளார்.
பத்மஜாவை பிடித்து கீழே தள்ளியதுடன், அவரது கழுத்தில் தன் காலை வைத்து அழுத்தியதால், மூச்சுத்திணறி இறந்தார். அதிர்ச்சி அடைந்த ஹரிஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பத்மஜா இறந்து கிடந்தது தெரிய வந்தது.
தலைமறைவாக இருந்த ஹரிஷை நேற்று காலை பொம்மனஹள்ளி போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.