/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆம்புலன்சுக்கு இடையூறு செய்தவர் கைது
/
ஆம்புலன்சுக்கு இடையூறு செய்தவர் கைது
ADDED : அக் 31, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மங்களூரு: தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி பிசிலே காட் பகுதியில் நேற்று காலை, பைக்கில் சென்ற இருவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்சில், மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பன்ட்வால் பி.சி.ரோட்டில் ஆம்புலன்ஸ் சென்றபோது, பைக்கில் சென்ற ஒருவர், வேண்டுமென்றே ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் இடையூறு செய்தபடி, 4 கி.மீ., துாரம் சென்றனர்.
இதை ஆம்புலன்ஸ் ஊழியர் மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார்.
வீடியோ வேகமாக பரவிய நிலையில், புத்துாரின் பெட்டம்பாடி கிராமத்தின் முகமது மன்சூர், 38, என்பவரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

