/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓட்டி பார்ப்பதாக கூறி பைக் திருடியவர் கைது
/
ஓட்டி பார்ப்பதாக கூறி பைக் திருடியவர் கைது
ADDED : மே 19, 2025 11:29 PM

பண்டேபாளையா: ஓட்டி பார்ப்பதாக கூறி எடுத்து சென்று, பைக்கை திருடியவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு பண்டேபாளையாவில் வசிப்பவர் ரிதாபினா தாஸ். இவர் தனது ஸ்கூட்டரை விற்க நினைத்தார். 'ஓஎல்எக்ஸ்' செயலியில் பைக் புகைப்படத்தை பதிவிட்டு விற்பனைக்கு என்று குறிப்பிட்டு, தனது மொபைல் நம்பரையும் பதிவிட்டிருந்தார்.
கடந்த 1ம் தேதி ரிதாபினாவிடம், நெலமங்களா ஆதர்ஷ்நகரில் வசிக்கும் பிரதீப், 31 என்பவர் மொபைல் போனில் பேசினார். 'உங்கள் பைக்கை வாங்கி கொள்கிறேன்' என்றார். ரிதாபினா வீட்டிற்கு சென்று பைக்கை பார்த்தார்.
ஒரு ரவுண்டு ஓட்டி பார்ப்பதாக கூறி பைக்கை எடுத்து சென்றார். திரும்பி வரவே இல்லை. மொபைல் நம்பருக்கு அழைத்த போது 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது.
பைக் திருடப்பட்டது பற்றி ரிதாபினா அளித்த புகாரில் பண்டேபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் பிரதீப் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து ஐந்து பைக்குகள் மீட்கப்பட்டன. இதற்கு முன்பு திருடிய பைக்குகளை ஓஎல்எக்ஸ் மூலம் விற்று பணம் சம்பாதித்தது தெரிந்தது.