/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர் இல்லை; ரவுடி கொலையில் கைதானவர் மறுப்பு
/
எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர் இல்லை; ரவுடி கொலையில் கைதானவர் மறுப்பு
எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர் இல்லை; ரவுடி கொலையில் கைதானவர் மறுப்பு
எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர் இல்லை; ரவுடி கொலையில் கைதானவர் மறுப்பு
ADDED : ஆக 27, 2025 10:55 PM

பெங்களூரு : பாரதிநகர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் கைதான ஜெகதீஷ், நான் எம்.எல்.ஏ., பைரதி பசவராஜின் ஆதரவாளர் இல்லை என்று, சி.ஐ.டி., முன் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
பெங்களூரு பாரதிநகரை சேர்ந்த ரவுடி சிவகுமார், கடந்த மாதம் 15ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முதல் குற்றவாளி ஜெகதீஷ் நேற்று முன்தினம் டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை பெங்களூரு அழைத்து வந்த சி.ஐ.டி., அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
சிவகுமார் கொலை நடந்ததும் சென்னைக்கு காரில் தப்பி சென்றது; அங்கிருந்து விமானத்தில் துபாய் சென்றது பற்றி கேள்வி எழுப்பிய, சி.ஐ.டி., - எஸ்.பி., வெங்கடேஷ், தப்பி செல்ல உதவியது யார் என்றும் கேட்டு உள்ளார். உங்களுக்கும், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜிக்கும் என்ன தொடர்பு; அவரது ஆதரவாளராக நீங்கள்; அவருடன் நீங்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் நிறைய உள்ளதே என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஜெகதீஷ், நான் எம்.எல்.ஏ., பைரதி பசவராஜின் ஆதரவாளர் இல்லை. கே.ஆர்.புரம் தொகுதியை சேர்ந்தவன். தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் அவரை அடிக்கடி சந்தித்து உள்ளேன். அப்போது அவருடன் புகைப்படமும் எடுத்து உள்ளேன். கும்பமேளாவுக்கு நான் முதலில் சென்றேன்; அவரும் அங்கு வந்திருப்பது தெரிந்ததும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டேன். சிவகுமார் கொலைக்கும், பைரதி பசவராஜிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உள்ளார்.