/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருட்டு வழக்கில் கைதானவர் போலீஸ் நிலையத்தில் தற்கொலை
/
திருட்டு வழக்கில் கைதானவர் போலீஸ் நிலையத்தில் தற்கொலை
திருட்டு வழக்கில் கைதானவர் போலீஸ் நிலையத்தில் தற்கொலை
திருட்டு வழக்கில் கைதானவர் போலீஸ் நிலையத்தில் தற்கொலை
ADDED : ஆக 20, 2025 11:26 PM
சென்னப்பட்டணா : கோவிலில் திருடிய குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டவர், போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னப்பட்டணா தாலுகாவின், கெஸ்துார் அருகில் உள்ள துன்டனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ரமேஷ், 45. மூன்று நாட்களுக்கு முன், சென்னப்பட்டணாவின் பொம்மநாயகனஹள்ளி கோவிலில் திருட்டு நடந்தது. இந்த திருட்டில் தொடர்பு உள்ளதாக ரமேஷ், அவரது மகன் மஞ்சு, 22, அனில், 30, ஆகியோரை எம்.கே.தொட்டி போலீசார் கைது செய்திருந்தனர். நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, கழிப்பறைக்கு சென்ற ரமேஷ், அங்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், போலீசார் கழிப்பறைக்கு சென்று பார்த்த போது, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. ஆனால், 'இது தற்கொலை அல்ல; விசாரணை என்ற பெயரில், ரமேஷை அடித்து போலீசார் கொலை செய்துள்ளனர்' என, அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து, விசாரிக்கும்படி உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.