தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிரேன் மீது ஏறியவர் இறங்க முடியாமல் தவிப்பு

 கிரேன் மீது ஏறியவர் இறங்க முடியாமல் தவிப்பு

 கிரேன் மீது ஏறியவர் இறங்க முடியாமல் தவிப்பு


ADDED : ஜூலை 28, 2026 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாரத்தஹள்ளி: மெட்ரோ பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த பெரிய கிரேனில், ஏறிய நபர் கீழே இறங்க முடியாமல் பரிதவித்தார்.

பெங்களூரின் மாரத்தஹள்ளி அருகில் மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. பணிகளுக்காக பெரிய கிரேன் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 1:30 மணியளவில், அங்கு வந்த நபர் ஒருவர், இந்த கிரேன் மீது ஏறினார். மீண்டும் கீழே இறங்க முடியாமல் பரிதவித்தார். மணிக்கணக்கில் கிரேன் மீது இருந்தார்.

இவரை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற ஹெச்.ஏ.எல்., போலீசார், தீயணைப்பு படை ஊழியர்கள், நபரை கீழே இறக்க நடவடிக்கை எடுத்தனர்.

மற்றொரு பெரிய கிரேன் வரவழைத்து, நீண்ட நேர முயற்சிக்கு பின், அந்நபரை பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தனர்.

மெட்ரோ பணிகளுக்காக நிறுத்தப்பட்ட கிரேனில், அந்நபர் என்ன காரணத்துக்காக ஏறினார், குடிபோதையில் இருந்தாரா, மன நலம் பாதிக்கப்பட்டவரா என்பது தெரியவில்லை. அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us