தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் திருமண பதிவுக்கு முன் அவசியம்

 பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் திருமண பதிவுக்கு முன் அவசியம்

 பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் திருமண பதிவுக்கு முன் அவசியம்


ADDED : ஜூலை 28, 2026 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'திருமணங்களை பதிவு செய்யும் போது, ஆதார் கார்டை மட்டுமே, வயது ஆவணமாக நினைக்க கூடாது. பிறப்பு சான்றிதழ், பள்ளி ஆவணங்களை ஆய்வு செய்வது கட்டாயம்' என, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியது.

இது குறித்து, பத்திரப்பதிவு துறை கமிஷனருக்கு, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எழுதிய கடிதம்:

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், குழந்தை திருமணங்கள் அதிகரிக்கின்றன. இதை கட்டுப்படு த்த நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். திருமணத்தை பதிவு செய்யும் போது, வயது சம்பந்தப்பட்ட ஆவணங்களை உன்னிப்பாக பரிசீலிக்க வேண்டும். வயதை உறுதிப்படுத்த, வெறும் ஆதார் கார்டை மட்டுமே, ஆவணமாக கருத கூடாது. பள்ளி ஆவணங்கள், பிறப்பு சான்றிதழை ஆய்வு செய்வது கட்டாயம்.

ஆதார் கார்டில் சரியான வ யது இருப்பதில்லை. திருமணத்தை பதிவு செய்யும் போது, ஆதார் கார்டை மட்டும் ஆவணமாக கருதினால், குழந்தை திருமணங்கள் பதிவாகும் அபாயம் உள்ளது. எனவே பிறப்பு சான்றிதழ், பள்ளி ஆவணங்கள், எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியலை ஆவணமாக பெறும்படி, பதிவு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

குழந்தை திருமணங்களை தடுப்பது, ஒவ்வொருவரின் பொ றுப்பாகும். அதிகாரிகள் விதிமுறைகளை மீறினால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவு அலுவலக ஊழியர்களுக்கு, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us