தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை


UPDATED : அக் 22, 2026 12:00 AM

ADDED : அக் 21, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 12:00 AM ADDED : அக் 21, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே: உறக்கத்தில் இருந்த கணவரை, கோடாரியால் தாக்கி கொலை செய்த மனைவிக்கு, ஆயுள் தண்டனை விதித்து, தாவணகெரே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின், சிக்ககோகலுாரு கிராமத்தில் வசித்தவர் சாந்தகுமார், 40. இவரது மனைவி ரேகா, 36. குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்கிடையே அவ்வப்போது சண்டை நடக்கும். சிறு, சிறு விஷயங்களுக்கும் வாக்குவாதம் செய்து கொள்வர்.

கடந்த 2023ன் மார்ச் 21ம் தேதி இரவும், வழக்கம் போல இருவருக்கும் ஏதோ காரணத்தால், காரசார வாக்குவாதம் நடந்தது. அதன்பின் சாந்தகுமார் உறங்க சென்றார். ஆனால் கோபத்தில் இருந்த ரேகா, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவரின் தலையில், கோடாரியால் சரமாரியாக தாக்கினார்.

சாந்தகுமாரின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அப்பகுதியினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

மாதக்கணக்கில் சிகிச்சை பெற்றும், குணமடையாத சாந்தகுமார், 2023ன் ஆகஸ் ட் 25ம் தேதியன்று உயிரிழந்தார்.

கணவரை தாக்கி, அவரது இறப்புக்கு காரணமான ரேகாவை, சந்தேபென்னுார் போலீசார் கைது செய்தனர். தாவணகெரேவின் இரண்டாவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

நேற்று இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது. ரேகாவின் குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 5௦ ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி கிருஷ்ண மூர்த்தி தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us