தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கொள்ளை வழக்கில் தேடப்பட்டவர் 37 ஆண்டுக்கு பின் கேரளாவில் சிக்கினார்

 கொள்ளை வழக்கில் தேடப்பட்டவர் 37 ஆண்டுக்கு பின் கேரளாவில் சிக்கினார்

 கொள்ளை வழக்கில் தேடப்பட்டவர் 37 ஆண்டுக்கு பின் கேரளாவில் சிக்கினார்


ADDED : ஆக 02, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்களூரு: கொள்ளை வழக்கில் தொடர்பு கொண்டு, தலைமறைவாக இருந்த நபர், 37 ஆண்டுகளுக்கு பின் போலீசாரிடம் சிக்கினார்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்தவர் அப்துல் காதர் என்ற மோனு, 57. இவர், 1989ல் தீர்த்தஹள்ளி தாலுகாவின், மிருகவதே கிராமத்தில், குட்டேகொப்பா என்ற இடத்தில் நடந்த கொள்ளையில் தொடர்பு கொண்டிருந்தார். சம்பவத்துக்கு பின் தப்பியோடி, தலைமறைவாகி விட்டார்.

தீர்த்தஹள்ளியின், மாளூரு போலீசார், அப்துல் காதரை தேடி வந்தனர். பல ஆண்டுகளாகியும் போலீசில் சிக்காமல் இருந்த அவரை, 37 ஆண்டுகளுக்கு பின், கேரளாவில் போலீசார் கண்டுபிடித்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன், அவரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன் தினம், ஷிவமொக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

போலீசார், 37 ஆண்டுகளாக போராடி, குற்றவாளியை கண்டுபிடித்ததை, எஸ்.பி., நிகில் உட்பட, உயரதிகாரிகள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us