/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண் எம்.எல்.ஏ.,வை இன்ஸ்டாகிராமில் தரக்குறைவாக விமர்சித்த நபர்
/
பெண் எம்.எல்.ஏ.,வை இன்ஸ்டாகிராமில் தரக்குறைவாக விமர்சித்த நபர்
பெண் எம்.எல்.ஏ.,வை இன்ஸ்டாகிராமில் தரக்குறைவாக விமர்சித்த நபர்
பெண் எம்.எல்.ஏ.,வை இன்ஸ்டாகிராமில் தரக்குறைவாக விமர்சித்த நபர்
ADDED : ஜன 12, 2026 06:51 AM

சிக்கமகளூரு: பெண் எம்.எல்.ஏ.,வை விபச்சாரி என்று, ஒருவர் இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்து உள்ளார்.
சிக்கமகளூரின் மூடிகெரே தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., நயனா, 44. இவர், இரண்டு இன்ஸ்டாகிராம் கணக்குகள் வைத்து உள்ளார். ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில் அரசியல் தொடர்பான பதிவையும்; இன்னொரு கணக்கில் தனிப்பட்ட பதிவையும் பதிவிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு கருத்து தெரிவித்த ஒருவர், விபச்சாரி என்று கருத்து பதிவிட்டு இருந்தார்.
இதனை 'ஸ்கீரின்ஷாட்' எடுத்த நயனா நேற்று அந்த பதிவை வெளியிட்டார். அவர் வெளியிட்ட பதிவில், 'பெண்களுக்கு எதிரான அணுகுமுறையை நான் எதிர்க்கிறேன். நான் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து புகைப்படம் பதிவிட்டால், என்னை விபச்சாரி என்று அழைக்கும் நிலைக்கு தாழ்ந் து விட்டனர்.
என்னை விமர்சிப்பவர்கள் கணக்கில், முகப்பு படங்கள் இருப்பது இல்லை. ஒருநாள் அவர்களை நான் கண்டிப்பாக எதிர்கொள்வேன்' என்று பதிவிட்டு உள்ளார்.