/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐ.நா., பொது செயலர் விருது வென்ற பெங்., ராணுவ மேஜர் சுவாதி சாந்தகுமார்
/
ஐ.நா., பொது செயலர் விருது வென்ற பெங்., ராணுவ மேஜர் சுவாதி சாந்தகுமார்
ஐ.நா., பொது செயலர் விருது வென்ற பெங்., ராணுவ மேஜர் சுவாதி சாந்தகுமார்
ஐ.நா., பொது செயலர் விருது வென்ற பெங்., ராணுவ மேஜர் சுவாதி சாந்தகுமார்
ADDED : ஜன 12, 2026 06:51 AM

பெங்களூரு: ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலர் - 2025 விருதை, பெங்களூரை சேர்ந்த ராணுவ மேஜர் சுவாதி சாந்தகுமார் வென்று உள்ளார்.
பல்வேறு செயல்பாடுகளில் சிறந்த சேவையை அங்கீரிக்கும் வகையில் 2025 ம் ஆண்டிற்கான விருதுகளை, ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலர் அன்டோனியா குட்டெரேஸ் அறிவித்தார்.
அவர் கூறியதாவது:
இந்தியாவின் ராணுவ மேஜர் சுவாதி சாந்தகுமார், ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலர் - 2025 விருதை வென்று உள்ளார். கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டின் தெற்கு சூடானில், தற்போது பணியாற்றும் அவர், அங்கு நிலவும் பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாப்பதிலும், சமூக அமைதியை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றி உள்ளார். சம கூட்டாண்மை, நீடித்த அமைதி என்ற திட்டத்தின் கீழ் அமைதி காக்கும் நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறார். அமைதி காக்கும் படையில் உள்ள தனது குழுவை திறம்பட பயன்படுத்துவதன் மூலம், ராணுவத்தில் பாலின சமத்துவத்தை வலுப்படுத்தி உள்ளார்.
சுறுசுறுப்பான ரோந்து பணிகள் மூலம் தனது திறனை நிரூபித்ததுடன், தெற்கு சூடானில் வசிக்கும் 5,000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விருது வென்று உள்ள சுவாதி, பெங்களூரின் லிங்கராஜபுரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சாந்தகுமார். தனியார் நிறுவன ஊழியர். தாய் ராஜாமணி. அரசு பள்ளி ஆசிரியை. கடந்த எட்டு ஆண்டுகளாக சுவாதி ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

