தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பல வடிவங்களில் மண் விளக்குகள் அசத்தும் எம்.பி.ஏ., பட்டதாரி பெண்

பல வடிவங்களில் மண் விளக்குகள் அசத்தும் எம்.பி.ஏ., பட்டதாரி பெண்

பல வடிவங்களில் மண் விளக்குகள் அசத்தும் எம்.பி.ஏ., பட்டதாரி பெண்


UPDATED : நவ 09, 2026 12:00 AM

ADDED : நவ 08, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 12:00 AM ADDED : நவ 08, 2026 05:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

அதி நவீன யுகத்தில், மொபைல் உலகில் பல பாரம்பரிய குலத்தொழில்கள் மறைகின்றன. குறிப்பாக மண் பாண்டங்கள் செய்வது குறைகிறது. இந்த கலைக்கு சுகன்யா என்பவர் புதுப்பொலிவு அளிக்கிறார்.

தாவணகெரேவை சேர்ந்த சுகன்யா; எம்.பி.ஏ., பட்டதாரி. நன்றாக படித்திருந்தும், தன் தாத்தா, கொள்ளு தாத்தா செய்து வந்த குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்யும் தொழிலை மறக்கவில்லை. தன் சகோதரர் சிவகுமாருடன் சேர்ந்து, அழகான மண் விளக்குகள் தயாரிக்கிறார்.

தீபாவளி நேரத்தில் இவர்கள் தயாரிக்கும் விளக்குகளுக்கு, அதிக டிமாண்ட் இருக்கும். பல விதமான விளக்குகள் மக்களை கவர்கின்றன.

குலத்தொழில்



இதற்கு முன் சிறு சிறு சட்டி, பானைகள், அகல் விளக்குகள் தயாரித்தனர். தற்போது விளக்குகளுக்கு புது வடிவம் கொடுத்துள்ளனர். தீபாவளி நேரத்தில் இவர்கள் தயாரிக்கும் விளக்குகள் பெங்களூரு, சித்ரதுர்கா, மைசூரு, பல்லாரி, ஹூப்பள்ளி, ஹாவேரி, தாவணகெரே உட்பட, பல்வேறு மாவட்டங்களில் விற்பனையாகின்றன. இவரது அண்ணியும் கூட, விளக்குகள் தயாரிப்பில் ஈடுபடுகிறார்.

பட்டப்படிப்பை முடித்து, ஐ.டி., நிறுவனங்கள், அரசு பணியை தேடி அலையும் ஆண்கள், பெண்கள் இருக்கும் நிலையில், முன்னோர்கள் வழி வந்த குலத்தொழிலை வளர்க்கும் சுகன்யா குடும்பத்தினரின் செயல் பாராட்டத்தக்கது.

சுகன்யா கூறியதாவது:

ஒவ்வொரு தீபாவளி நேரத்திலும், நாங்கள் சிறப்பான வடிவங்களில் மண் விளக்குகள் தயாரிக்கிறோம். மேஜிக் விளக்கு, விநாயகர் விளக்கு, யானை விளக்கு, லட்சுமி விளக்கு, ஆமை விளக்கு, மயில் விளக்கு, அன்னப்பறவை விளக்கு, பேனா ஸ்டாண்ட் விளக்கு உட்பட, பல்வேறு விளக்குகள் தயாரிக்கிறோம். இவைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் தேவைக்கு தக்கபடி, விளக்குகள் சப்ளை செய்ய முடியவில்லை. சிலர் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பது, வருத்தம் அளிக்கிறது. என் சகோதரர் சிவகுமாரும், முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர். அவர் சிறு வயதில் இருந்தே, தந்தை செய்யும் மண்பாண்ட தொழிலை பார்த்து வளர்ந்தவர்.

களி மண்ணில் பானை, சட்டி, சிறு சிறு விளக்குகள் தயாரித்து வந்த இவர், பிடதியின், ஜோகரட்டியில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து, பயிற்சி பெற்றார்.

ஏரி மண்



காலத்துக்கு ஏற்றபடி, விளக்குகள் தயாரிக்கிறார். அவருக்கு நானும் உதவியாக இருக்கிறேன். நான் திருமணமாகி, கார்கலில் கணவர் வீட்டில் வசிக்கிறேன். தீபாவளி நேரத்தில் தாய் வீட்டுக்கு வந்து, என் சகோதரருக்கு உதவியாக, விளக்குகள் தயாரிக்கிறேன்.

விளக்குகள் தயாரிக்க ஹரிஹரா தாலுகாவின் ராஜனஹள்ளி, துமக்கெரே ஏரிகளில் இருந்து, மண் கொண்டு வரப்படுகிறது. இயந்திரங்கள் பயன்படுத்தாமல், கைகளால் விளக்குகள் தயாரிக்கிறோம்.

நாங்கள் அதிக விலைக்கு விளக்குகள் விற்பதில்லை. ஒரு டஜன் சிறிய விளக்குகளின் விலை 30 ரூபாய். 120 ரூபாய்க்கு விற்கிறோம். 150 ரூபாய் விளக்குகளும் உள்ளன. நானும், என் சகோதரரும் இரட்டை டிகிரி படித்திருந்தும், எங்கள் குலத்தொழில் நசிந்து போகாமல் பார்த்து கொள்கிறோம். எங்கள் தந்தைக்கு 75 வயதாகியும், இந்த தொழிலை செய்கிறார். நாங்கள் விளையாட்டு பொருட்களும் தயாரிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us