தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/உலகின் முதல் எல்.இ.டி., பேனல் கோளரங்கம் மைசூரில் 13ம் தேதி பிரதமர் மோடி திறப்பு

உலகின் முதல் எல்.இ.டி., பேனல் கோளரங்கம் மைசூரில் 13ம் தேதி பிரதமர் மோடி திறப்பு

உலகின் முதல் எல்.இ.டி., பேனல் கோளரங்கம் மைசூரில் 13ம் தேதி பிரதமர் மோடி திறப்பு


UPDATED : நவ 08, 2026 12:00 AM

ADDED : நவ 07, 2026 09:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:00 AM ADDED : நவ 07, 2026 09:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: 'புரொஜக்டர்' இல்லாமல் எல்.இ.டி., பேனல்களால் இயக்கப்படும் கோளரங்கத்தை, மைசூரில் வரும் 13ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

இந்திய வானியல் இயற்பியல் நிறுவனம் மற்றும் மைசூரு பல்கலைக்கழகம் இணைந்து, மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் 116 கோடி ரூபாய் செலவில், புதிய கோளரங்கத்தை கட்டியுள்ளனர்.

உலகின் முதல் எல்.இ.டி., பேனல் கோளரங்கமாக உருவாகியுள்ளது. கர்நாடகாவுக்கு வரும் 13ம் தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, புதிய கோளரங்கத்தை திறந்து வைக்கிறார். பொதுவாக உலகெங்கிலும் உள்ள கோளரங்குகளில், வெற்று வட்ட கூரையின் மீது புரொஜக்டர்கள் மூலம் ஒளிக்கற்றை பாய்ச்சி படங்கள் திரையிடப்படும். ஆனால் இந்த கோளரங்கில் புரொஜக்டர்கள் கிடையாது. 15 மீட்டர் விட்டம் கொண்ட இதன் முழு குவிமாட கூரையும் கணினியில் நேரடியாக கட்டுப்படுத்தப்படும் 8கே தரத்திலான எல்.இ.டி., பேனல்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

மற்ற கோளரங்குகளில் தலைக்கு நேர் மேல உள்ள கூரையை பார்க்க வேண்டும் என்றால் பார்வையாளர்கள் நாற்காலியை முழுமையாக சாய்ந்த்து கழுத்தை உயர்த்தி பார்க்க வேண்டும்.

ஆனால் இங்கு பார்வையாளர்கள் நேருக்கு நேர் அமர்ந்து, தங்கள் கண்முன்பே ஒட்டுமொத்த விண்வெளி, விண்மீன் கூட்டங்களை தத்ரூபமாக பார்க்க முடியும். ஒரே நேரத்தில் 150 பேர் அமர்ந்து பார்க்கலாம்.

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அறிவியல் பற்றிய தகவல்களை வழங்குவது, விண்வெளி குறித்த சிக்கலான கேள்விகளுக்கு தர்க்கரீதியான பதில்களை அளிப்பது, வானியல் கருத்துகளை காட்சிப்படுத்த உதவுவது கோளரங்கத்தின் நோக்கமாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us