/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மழை பெய்வதால் தொண்டை வலி மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
/
மழை பெய்வதால் தொண்டை வலி மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
மழை பெய்வதால் தொண்டை வலி மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
மழை பெய்வதால் தொண்டை வலி மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
ADDED : ஆக 30, 2025 11:04 PM
பெங்களூரு: மாநிலம் முழுவதும், தொடர் மழையால், காய்ச்சல், தொண்டை வலி பிரச்னையால் பலரும் அவதிப்படுகின்றனர். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் உடல் ஆரோக்கியத்தில், அக்கறை காட்டும்படி மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நடப்பாண்டு மே மாதம் முதல் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டதால், நோய்கள் பரவுகின்றன. காய்ச்சல், தொண்டை வலி, சளி பிரச்னையால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக தொண்டை வலியால் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை, 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ வல்லுநர்கள் கூறியதாவது:
தொண்டை வலியால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக காய்ச்சல், தொண்டை வலியால், சிறார் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். காதுகளின் கீழ்ப்பகுதியில், வலி ஏற்படுகிறது.
வறட்டு இருமல், சளி, தலைவலி, உடல் வலியுடன், காய்ச்சலும் வருகிறது. சிகிச்சை அளித்தாலும் குணமடைய, ஒரு வாரம் ஆகும். பணிக்கு செல்வோர், பள்ளிக்கு செல்லும் சிறார் கவனமாக இருக்க வேண்டும். குளிர் நேரத்தில் வெளியே நடந்து செல்லும் போது, அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
நோய் தொற்று ஒருவரிடம் இருந்து, விரைவில் மற்றவருக்கு பரவும். காய்ச்சல், சளி, தொண்டை வலியால் அவதிப்படுவோர், தனித்திருப்பது நல்லது. இல்லையென்றால் மற்றவருக்கு பரவும் அபாயம் உள்ளது.
எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவது, சாட்ஸ் சென்டர் மற்றும் ஹோட்டல்களில், துாய்மையற்ற தட்டுகள், தம்ளர்கள், ஸ்பூன்கள் பயன்படுத்துவதாலும், நோய்கள் பரவும். எனவே கொரோனா நேரத்தில் இருந்த விதிமுறைகளை, இப்போதும் பின்பற்றுவது நல்லது.
வெளியே செல்லும்போது, ஸ்வெட்டர், ஜர்கின், மாஸ்க் பயன்படுத்த வேண்டும். கைகளை நன்றாக கழுவிய பின், சாப்பிடுவது அவசியம். சூடான உணவை சாப்பிடுங்கள். நீரை கொதிக்க வைத்து, அருந்த வேண்டும். பழங்களை உப்பு நீரில் கழுவி பயன்படுத்துவது நல்லது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.