ஆண்கள் பாதுகாப்பு ஆணையம் பா.ஜ., விஸ்வநாத் வலியுறுத்தல்
ஆண்கள் பாதுகாப்பு ஆணையம் பா.ஜ., விஸ்வநாத் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 05, 2026 02:19 AM

மைசூரு: ''சமுதாயத்தில் பெண்களை போன்று, ஆண்களும் கூட பல விதமான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய, ஆண்கள் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் வலியுறுத்தினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சமீப நாட்களாக பெண்களை விட, ஆண்கள் அடக்கு முறைக்கு ஆளாவது அதிகரிக்கிறது. மகளிர் போலீஸ் நிலையங்களிலேயே, ஆண்கள் தாக்கப்படும் உதாரணங்கள் நடந்து உள்ளன.
போலீஸ் நிலையங்களில், ஆண்கள் அளிக்கும் புகார்களுக்கு, முக்கியத்துவம் கிடைப்பது இல்லை. எனவே மகளிர் ஆணையம் போன்று, ஆண்களுக்கும் சட்டரீதியான பாதுகாப்பு வேண்டும். தேவையான சட்டத்திருத்தம் கொண்டு வந்து, ஆண்கள் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும். பெண்களின் பொய் புகார்களால், சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதால், ஆண்கள் மனம் நொந்துள்ளனர்.
பெண்களுக்கு இருப்பதை போன்று, ஆண்களுக்கு உதவும் வகையில், 'தேசிய மனித உரிமைகள் ஆண்கள் நலன் பாதுகாப்பு டிரஸ்ட்' அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மாண்டியா மாவட்டத்தில், இந்த டிரஸ்ட் துவக்க விழா பெரிய அளவில் நடக்கவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
