/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆஷா ஊழியர்களுக்கு 'மாதவிடாய் கப்'கள்
/
ஆஷா ஊழியர்களுக்கு 'மாதவிடாய் கப்'கள்
ADDED : ஆக 16, 2025 11:16 PM

பெங்களூரு: 'மாண்டியாவில் ஆஷா பணியாளர்களுக்கு, 2,200 மாதவிடாய் 'கப்'கள் வழங்கப்பட்டுள்ளன' என, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நேற்று அவர் தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் 'கப்'கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக 'சகி சுரக் ஷா' திட்டம் மூலம், முதல் முறையாக மாண்டியாவில் உள்ள ஆஷா பணியாளர்களுக்கு 2,200 மாதவிடாய் 'கப்'கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, ஆஷா பணியாளர்கள், தங்கள் கிராமங்களில் உள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.
வரும் நா ட்களில் மாதவிடாய் 'கப்'கள் அங்கன்வாடி ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியை, பெண் கிராம பஞ்சாயத்து உறுப்பினர், மகளிர் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கும் வழங்கப்படும். இந்த 'கப்'கள் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை, நீண்ட நாட்க ளுக்கு பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது. சி.எஸ்.ஆர்., எனும் நிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.