தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது: முதல்வர் தகவல்

பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது: முதல்வர் தகவல்

பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது: முதல்வர் தகவல்


UPDATED : நவ 01, 2026 12:00 AM

ADDED : அக் 31, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 12:00 AM ADDED : அக் 31, 2026 09:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''நாம் பசுக்களை பாதுகாக்க விரும்பினால், அவற்றுக்கு நன்மை செய்ய விரும்பினால், பால் விலையை ஏற்றுவதை தவிர, வேறு வழியில்லை,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

இன்று முதல் நந்தினி பால் ஒரு லிட்டர், 8 ரூபாய் உயர்த்தப்படும் என, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த அறிவிப்புக்கு, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

பெங்களூரில் முதல்வர் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி:

வறட்சி காரணமாக, பால் உற்பத்தி குறைந்து வருகிறது. பசுக்களை பாதுகாக்க விரும்பினால், அவற்றுக்கு நன்மை செய்ய வேண்டும். பால் விலையை ஏற்றுவதை தவிர, வேறு வழியில்லை.

கால்நடைகளுக்கு தீவனம் வழங்க வேண்டும். தீவனம் வழங்க விவசாயிகள் வசதி படைத்தவர்களாக இருக்க வேண்டும். நாம் பசுக்களை மதிக்கும் வகையில் செயல்பட வேண்டும். வறட்சியின் போது பசுக்களை காப்பாற்ற வேண்டும்.

ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தும்படி பால் கூட்டுறவு சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. அண்டை மாநிலங்களில் இதை விட, ஒரு லிட்டர் பாலின் விலை அதிகம். நம் விவசாயிகள் பாலை இங்கிருந்து அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இதை கருதி, பாலின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us