தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பால் விலை உயர்வு விரைவில் கூட்டம்

 பால் விலை உயர்வு விரைவில் கூட்டம்

 பால் விலை உயர்வு விரைவில் கூட்டம்


ADDED : செப் 19, 2026 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 11:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: ''கர்நாடகாவில் நந்தினி பால் விலை உயர்வு குறித்து, பால் உற்பத்தியாளர் சங்கங்களுடன் விரைவில் கூட்டம் நடத்தி, முடிவு எடுக்கப்படும்,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

சிக்கமகளூரு மாவட்டம், ரம்பாபுரி மடத்திற்கு நேற்று முதல்வர் சிவகுமார் சென்றிருந்தார். பின், அவர் அளித்த பேட்டி:

கால்நடைகளுக்கு வழங் கப்படும் தீவனம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பால் உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளது.

அண்டை மாநிலங்கள் அதிக விலை கொடுப்பதால், நம் மாநில பால் விவசாயிகள் அவர்களுக்கு பாலை விற்கின்றனர். பால் உற்பத்தி குறைந்துள்ளது. தமிழகத்தில் ஒன்பது முதல், 10 ரூபாய் வரை பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

எங்களுக்கும் 8 - 9 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என்று பால் சங்கங்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கு தீர்வு காண, விரைவில் பால் உற்பத்தியாளர் சங்கங்களுடன் கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us