தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாலியல் வழக்கில் சூரஜ் குற்றமற்றவர்: போலீசார் அறிக்கை

 பாலியல் வழக்கில் சூரஜ் குற்றமற்றவர்: போலீசார் அறிக்கை

 பாலியல் வழக்கில் சூரஜ் குற்றமற்றவர்: போலீசார் அறிக்கை


ADDED : செப் 19, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கில், அவர் குற்றமற்றவர்,' என சி.ஐ.டி., போலீசார், நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ம.ஜ.த., - எம்.எல்.சி.,யுமான சூரஜ் ரேவண்ணா மீது ஹாசன் மாவட்டம் அரகலகூடுவை சேர்ந்த வாலிபர், பாலியல் புகார் கொடுத்தார்.

இவ்வழக்கில், 2024ம் ஆண்டில் சூரஜ் கைது செய்யப்பட்டார். பின், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்த வழக்கை சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.

இவ்வழக்கில் சூரஜ் குற்றவாளி என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறிய போலீசார், அவர் மீது, 'பி' அறிக்கை எனும், குற்றமற்றவர் என்ற அறிக்கையை 2025 ஜூனில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதை எதிர்த்து புகார்தாரர், நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்தார். போலீசார் ஒழுங்காக விசாரிக்காமல், அவசர அவசரமாக வழக்கை முடிக்க பார்ப்பதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மறுவிசாரணை நடத்தி புதிய அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, சி.ஐ.டி., போலீசார், மீண்டும் விசாரணையை நடத்தி, இரண்டாவது முறையாக, 'சூரஜ் குற்றமற்றவர்' என்ற அறிக்கையை நீதிமன்றத்தில் நேற்று சி.ஐ.டி., போலீசார் சமர்ப்பித்து உள்ளனர்.

இதனால், சூரஜுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us