தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கல்வி சுற்றுலாவில் 'வீடியோ' எடுக்க தடை

 கல்வி சுற்றுலாவில் 'வீடியோ' எடுக்க தடை

 கல்வி சுற்றுலாவில் 'வீடியோ' எடுக்க தடை


ADDED : செப் 19, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கல்லுாரி மாணவர்கள், கல்வி சுற்றுலா செல்லும் போது, 'செல்பி' வீடியோ எடுப்பதற்கு தடை விதித்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:

கல்லுாரி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை மனதில் கொண்டு, கல்வித்துறை புதிய விதிமுறைகள் செயல்படுத்தியுள்ளது. மாநிலத்தின் அரசு கல்லுாரிகள், மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் போது, மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்தி, செல்பி எடுக்கும் ஆர்வத்தில் தங்களை மறந்து, அபாயத்தில் சிக்குகின்றனர்.

இதை தவிர்க்கும் நோக்கில், கல்வித்துறை கடின விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

கல்வியே பிரதானம் சுற்றுலா செல்லும் இடங்களில், எந்த விதமான செல்பி போட்டோ, ரீல்ஸ் வீடியோ எடுக்க, அனுமதி இல்லை. சுற்றுலா கல்வி நோக்கத்துக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

 கல்வி சுற்றுலா காலம், ஐந்து நாட்களுக்கும் அதிகமாக இருக்க கூடாது.

 கல்லுாரி கல்வித்துறையிடம், முன் கூட்டியே அனுமதி பெறாமல், எந்த சுற்றுலாவும் ஏற்பாடு செய்யக்கூடாது. சுற்றுலா செல்லும் இடங்களின் பட்டியலை, முன் கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்.

 சுற்றுலா செல்லும் மாணவர்களுடன், நிரந்தர பேராசிரியர் இருக்க வேண்டும். கவுரவ பேராசிரியர்களை மாணவர்களுடன் அனுப்ப கூடாது.

பாதுகாப்பு முக்கியம்  மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், மழைக்காலத்தில் கல்வி சுற்றுலா மேற்கொள்ள, அனுமதி அளிக்கப்படாது.

 சுற்றுலா செல்லும் பேராசிரியர்கள் எண்ணிக்கை, நான்கை தாண்டக்கூடாது. நால்வரில் இருவர் பேராசிரியையாக இருப்பது கட்டாயம். ஒரு 'டி' குரூப் ஊழியர் இருக்க வேண்டும்.

 சுற்றுலா புறப்படுவதற்கு முன், அந்தந்த பகுதிகளின் போலீஸ் நிலையத்தில், பயணிக்கும் பாதைகள், செல்லும் இடங்களை பற்றி அனைத்து விபரங்களையும், தெரிவிப்பது கட்டாயம்.

 ஆறுகள், கடல், நீர் வீழ்ச்சி, அடர்ந்த வனம், செங்குத்தான மலைகள் போன்ற அபாயமான இடங்களுக்கு செல்லும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். டிரெக்கிங் செல்வது, நீச்சல் அடிப்பதாக இருந்தால், வல்லுநர்கள் உடன் இருப்பது அவசியம்.

 அனுமதி அளிக்கப்பட்ட இடங்களை தவிர, மற்ற இடங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது.

 மாணவியரின் பாதுகாப்புக்கு தேவையான வசதிகளை, செய்து கொள்வது கட்டாயம். ஒருவேளை மாணவியருக்கு பிரச்னை அல்லது அசம்பாவிதம் நடந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட பிரிவு தலைவர் மற்றும் கல்லுாரி முதல்வரே, நேரடி பொறுப்பாளியாவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us